FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Dharshini on April 16, 2012, 11:12:39 PM

Title: நண்டு மசாலா குழம்பு
Post by: Dharshini on April 16, 2012, 11:12:39 PM
நண்டு - 6
தயிர் - ஒரு கப்
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
அரைப்பதற்கு மசாலா பொருட்கள்
தேங்காய் - கால் மூடி
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒன்றரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 8
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புதினா - சிறிதளவு
 

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சதைப் பகுதியை எடுத்துத் தயிருடன் கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பிறகு அரைத்த மசாலாவை இதில் போட்டு, சிறிது நேரம் வதக்கவும். எலுமிச்சை ரசத்தைச் சேர்த்துக் கலக்கவும்.
தயிருடன் உள்ள நண்டுக்கறியை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும்.
அரைமூடி தேங்காயைத் துருவி பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். நண்டுக்கறி வெந்தவுடன் தேங்காய்ப்பாலை ஊற்றி லேசாக கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
Title: Re: நண்டு மசாலா குழம்பு
Post by: suthar on April 25, 2012, 01:56:22 PM
nandu,
   nandu ku enna aachu orey nadu item ah iruku.......... great....
Title: Re: நண்டு மசாலா குழம்பு
Post by: Dharshini on April 30, 2012, 05:44:22 PM
ithu nandu vaaram suthar athan ;D ;D