FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 28, 2025, 07:26:22 AM
-
இருள் சூழ்ந்தாலும் பயமில்லை,
எனது உள்ளத்தில் தீபம் உள்ளது.
தேன் சொட்டும் நம்பிக்கையால்,
தோல்வி என்னை வெல்ல முடியாது.
நான் என் நிழலையே தோற்கடிப்பேன்,
நம்பிக்கையோ எனது துணை!
வாழ்க்கை எனும் போர்க்களத்தில்
வெற்றி எனது உரிமை!
-
Keep Achieving ❤️
-
நம் மேல் நாம் கொண்ட நம்பிக்கை
அதனைவிட சிறந்ததும் உண்டோ இவ்வுலகில்
தொடர்ந்து முன்னேறுங்கள் :)