FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 25, 2025, 08:08:28 PM

Title: தேடல் ‌
Post by: Asthika on May 25, 2025, 08:08:28 PM
மழைசாரல் நினைவுகளிலே
மறைந்துவிட்ட உன் முகத்தைத் தேடி
மண்ணின் வாசலில் விழிகள் சுற்றும்,
உனக்காகவே காலங்கள் சுழலும்.

நிழல்கள் பேசும் உன் வார்த்தைகள்
நெஞ்சின் மூலைகளில் கனவாய் உதிக்கும்.
காலம் கடந்து பயணிக்கிறேன்
கண்கள் மூடியும் உன்னை தேடி.

அந்த புன்னகை – கனிந்த ஓர் ஒளி
எங்கோ மறைந்து போன தேனீய சுரங்கம்.
நானும் ஒரு வண்டாய் மழையில்
உன் வாசலை மட்டும் தேடி வருகிறேன்


(https://i.ibb.co/BFDfNVY/images-9.jpg) (https://ibb.co/cV5yLcs)