FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on May 23, 2025, 05:43:19 PM
-
(https://i.ibb.co/LdC4bWgm/1000101330.jpg) (https://ibb.co/MkRqW41r)
Sugar Baby !
அவள் தேடியது காதலா?
அவன் கொடுத்தது காசா?
இரண்டும் கலந்த பிரதிபிம்பம்
இந்த வாழ்கையின் ஒளிவிலக்கு.
சில நேரங்களில்,
ஒரு சிரிப்புக்காக
ஒரு விலை தீர்மானிக்கப்படும்.
அது பாசமா ?
இல்லையென்று தெரிந்தும்,
பாசத்தை போல நடிக்க
வேண்டியதாய் இருக்கின்றது
அவன் கைபேசியில் அவள் பெயர்
"பேபி" என்று பளிச்சிடும்,
ஆனால் அவன் சிந்தனையில்
அவள் உடல் மேனி மட்டுமே மின்னும்.
அவள் வாழ்க்கை
ஒரு சலுகை அல்ல,
ஒரு Survival Plan.
அவன் செலுத்தும் விலைகள்
அவள் காதலுக்காக அல்ல
அவள் வாடகைக்காக,
அவள் கட்டணங்களுக்காக,
அவள் கனவுகளுக்காக.
இது ஒரு காதல் போல
தோன்றும் ஓர் தொழில்,
ஒரு தொழில் போல
நடக்கும் ஓர் காதல்.
எந்த உணர்வும் இல்லாத
உறவுகளில்
அவள் உணர்வுகளோடு
வாழ முயல்கிறாள்.
அவள் ஒரு “Sugar Baby”
ஆனால் அவள் கனவுகளுக்கு
இனிப்பு தேவை
வாழ்க்கை கடினமாக இருந்தாலும்
அவள் கசப்பை
மட்டும்தான் விற்கிறாள்,
அவள் மனதை அல்ல.
-
நம்மை சுற்றி இருக்கும் சிறு சிறு விஷயங்களில்
இருக்கும் இன்பத்தை மறந்து
சிற்றின்பத்திற்காய் சுகர் பேபி என்று சென்றால்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே
பணத்தால் வரும் மரியாதையும் சந்தோஷமும்
அதிக நேரம் நீடிப்பதில்லை
அவளும் பெண் தானே !
நல்ல பதிவு மச்சி
-
ஜோக்கர் மச்சி 🤩 நன்றி
Sugar babyகள் பிறப்பதில்லை, பொருளாதார, சமூக அழுத்தங்களால் உருவாக்கப்படுகிறார்கள். சமூகம் அவர்களின் இயலாமையைப் பயன்படுத்துகிறது.