FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 22, 2025, 09:13:17 PM

Title: அவளும் நானும் !
Post by: joker on May 22, 2025, 09:13:17 PM
மழைத் துளி விழும் நேரம்,
மனதோடு பேசும் தருணம்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடைவெளி குறைந்திடும் நேரம்
குளிர் தென்றலும்
உன்னை தீண்டுகையில்
நாணம் கொண்ட தருணம்

கை கோர்த்து நடந்தாய் அருகே,
காதலாய் பூத்தேன்

தேங்கிய நீர் துளிகளில்
ஓவியம் ஒன்று கண்டேன்
அது எனக்காய் பிரம்மன்
படைத்ததாய் உணர்ந்தேன்

மரங்கள் மலர்கள் தூவும்,
காற்று மலர்களின் நறுமணம்  பரப்பும்
உன் உதடுகளோ
நாணத்தில் புன்னகை பூக்கும்

நீ ஒரு பாடல் எனில்
மௌனத்தின் ராகமாய் நான்

நீ  ஓர் காற்று எனில்
நானொரு இலை
நம்  காதல் சொல்ல
கைகளில் தவிழ வேண்டும்
மழலை


****JOKER****
Title: Re: அவளும் நானும் !
Post by: Evil on May 22, 2025, 10:16:02 PM
Nice machi
Title: Re: அவளும் நானும் !
Post by: Vethanisha on May 23, 2025, 07:36:29 AM
So nice 😇