FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 19, 2025, 01:30:10 PM
-
வியர்வை உரமாக்கி
உழப்பை வரமாக்கி
உழவன் மண்ணிற்கும்
அளிக்க
மண் தருதே நெல்கதிரும்
- மஞ்சள்
காதல் மெருகேற
கலந்து உருசேர
மனதை இணைக்கின்ற
பந்தம்
திருமணத்தில் தாலி நிறம்
- மஞ்சள்
கிழக்கில் தான் தோன்றி
மேற்கில் தான் மறைய
குதித்து ஓடி வரும்
பரிதி
அது விரிக்கும் கதிருமே
- மஞ்சள்
மண்ணில் புதைந்திருந்து
மங்கை மனம்திருட
ஆபரணம் என்று மாறி
உலகை ஆளும் தங்கம்
- மஞ்சள்
பொங்கல் குடத்தினிலும்
இன்பம் பொங்கும் நெற்றியிலும்
பூ மிதிக்கும் தடத்தினிலும்
பகல் முழுதும் சுற்றிலுமே
நிறைந்து பரவிவரும் மஞ்சள்
அது இன்பம் தந்திடுமே நெஞ்சில்
-
குட் கேர்ள் ஆம் வேதனிஷா
அவளுக்கும் பிடிச்ச நிறம்
மஞ்சள் 😂😂
அருமையான கவிதை தோழா
-
அதனால் தானே மஞ்சள் பற்றி எழுதினேன்🤣
-
எங்கும் மஞ்சள்
எதிலும் மஞ்சள்
மஞ்சளோ மஞ்சள் :) :)
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் கவி பயணம்