FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 17, 2025, 02:02:37 PM

Title: சியா விதை தண்ணியும், சீரக தண்ணியும் வெயிட் லாஸ்க்கு உதவும்!
Post by: MysteRy on May 17, 2025, 02:02:37 PM
(https://i.imgur.com/85xRDRQ.jpeg)

ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும்!👇


👉சீரகத் தண்ணிய எடுத்துக்கிட்டா, அது நம்மளோட செரிமானத்தை நல்லா தூண்டிவிடும். சாப்பிட்டது நல்லா ஜீரணமாகிடும்.
👉அப்புறம் நம்ம உடம்புல இருக்கற எனர்ஜியையும் (metabolism) கூட்டும். அதனால கொழுப்பு எல்லாம் கொஞ்சம் எரியும்!
உடம்புல இருக்கற தேவையில்லாத குப்பையெல்லாம் (toxins) வெளியேத்திடும்.
👉அது மட்டுமில்ல, அதுல ரொம்ப கம்மியான கலோரிதான் இருக்கு நம்ம ஸ்கின்னுக்கும், முடிக்கும் கூட ரொம்ப நல்லது!

இப்ப சியா விதை தண்ணிய பாத்தீங்கன்னா!
👉அது குடிச்சதும் வயிறு ஃபுல்லான ஃபீல் கொடுக்கும். ஏன்னா அது தண்ணிய உறிஞ்சி ஒரு மாதிரி ஜெல் மாதிரி ஆயிடும். அதனால டக்குனு பசிக்காது!
👉அதுல நிறைய ஃபைபர் இருக்கு. அதனால வயிறு சுத்தமாகும், மலச்சிக்கல் எல்லாம் வராது.
👉அப்புறம் நம்ம ஹார்ட்டுக்கு ரொம்ப நல்லது பண்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதுல நிறைய இருக்கு.
👉தசையெல்லாம் நல்லா வளர புரோட்டீன் கூட இருக்கு! சர்க்கரை வியாதி இருக்கறவங்களுக்கும் அது ரொம்ப நல்லது!

இப்போ எது பெஸ்ட்ன்னு கேட்டீங்கன்னா, அது உங்க உடம்ப பொறுத்துதான் இருக்குது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தா இல்ல எனர்ஜி கூடணும்னா சீரகத் தண்ணி ட்ரை பண்ணலாம்.
இல்ல ரொம்ப நேரம் பசிக்காம இருக்கணும், நல்ல சத்து வேணும்னா சியா விதை தண்ணி சூப்பரா இருக்கும்.

சில பேரு ரெண்டையுமே லைட்டா எடுத்துக்கிட்டா ரெண்டுத்தோட சத்தும் கிடைக்கும். 😊