FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 16, 2025, 01:28:47 PM

Title: "என்னை பார்க்காதே"
Post by: Unique Heart on May 16, 2025, 01:28:47 PM
நான் தொலைவில் இருக்கும் தருணம், நான் தொலைந்துவிட்டேன் என்ற கண்ணோட்டத்தில் "என்னை பார்க்காதே".

நான் கலங்கி நிற்கும் தருணம் "என்னை பார்க்காதே", என் கலங்கிய கண்கள் உன்னை கவலையில் கதறி அழ தூண்டலாம்.

நான் உறக்கமில்லாது உழைக்கும் தருணம் உன்னிடம் கதைக்கும் கணங்கள் சிறிது குறைந்திருக்கலாம், அதற்காக நான் உன்னை மறந்திருக்க கூடுமோ என்ற எண்ணத்தில் "என்னை நீ பார்க்காதே". 

என் இதயம் உனை மறக்கும் தருணம், என் இதயம் எனக்காக துடிப்பதை நிறுத்திய தருணமாக மட்டுமே இருக்கும்.....
❤️MN-AHAMED AARON.. ❤️
Title: Re: "என்னை பார்க்காதே"
Post by: SweeTie on May 16, 2025, 07:34:48 PM
கண்கள் பார்க்கும் தூரம்  சிறியது
இதயங்கள் பார்க்கும் தூரமோ பெரியது
சொல்வதை கேட்பது  கண்கள்
சொல்  கேட்காமல் தேடுவது  இதயம்

அருமை  கவிதை 
Title: Re: "என்னை பார்க்காதே"
Post by: Unique Heart on May 17, 2025, 01:40:16 AM
நீங்க சொன்னா சரிதான். மிக்க நன்றி 🌹🌹🌹.