FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 14, 2025, 08:22:16 AM

Title: அலைந்து திரிந்து...
Post by: MysteRy on May 14, 2025, 08:22:16 AM


முட்டிமோதி ஒருவழியா பக்குவப்பட்டு, முதிர்ச்சி வெளிப்பட தொடங்கும்போது தெரியும் அறிகுறிகள்..

1. நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தை குறையத்தொடங்கியிருக்கும்.

2. அர்த்தமில்லாமிலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பது குறைந்திருக்கும்.

3. எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாள தெரிந்திருக்கும்.

4. விட்டுகொடுப்பது கூடியிருக்கும்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்ற யதார்த்தம் புரியத்தொடங்கும்.

6. நான் சொன்னதே சரி, நான் செய்வதே சரி என்று இப்பொதெல்லாம் வாதிடுவது காணாமல் போயிருக்கும்.

7. குறுகிய மனப்பான்மை அகன்றிருக்கும்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதெல்லாம் நிறுத்தப்பட்டிருக்கும்.

9. மற்றவர்களை விட தன்னையே எப்போதும் உயர்த்தி நினைத்தது இப்போது வேடிக்கையாக தெரியும்.

10. அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படுவது தவிர்க்கப்பட துவங்கும்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது இருக்காது.

12. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்புவது குறைந்திருக்கும்.

13. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாமல் அதை கடந்து போவது சாத்தியமாகும்

14. எந்த கருத்துகளிலும் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுவது இயல்பாகியிருக்கும்.

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்துகொள்வது இருக்காது.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதோடு, இனிய இதமான சொற்கள் பிரயோகத்துக்கு வரும்.

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் நேரம் கிடைக்கும்.

18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவது குறைந்திருக்கும். மாறாக அடக்கமும், பண்பாடும் மேலோங்கும்.

19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி
வரவேண்டும் என்ற பிடிவாதம் இருக்காது.

20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் தவறாமல் சொல்வது அடிக்கடி நடக்கும்.