FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on May 14, 2025, 01:50:26 AM
-
அறிவிலே சிறந்தவன்
ஆற்றலில் பெரியவன்
இம்மையை மதிப்பவன்
ஈகையில் உயர்ந்தவர்
உறுதியில் நிறைந்தவன்
ஊக்கமாய் உழைப்பவன்
என்னை ஆளும் ஈசன் போல்
ஏற்றம் இறக்கம் அற்றவன்
ஒற்றுமையை விரும்புவான்
ஓதுவது அவன் தொழில்
அவன் யாரோ, அவனே மனிதன் !!!