FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 10, 2025, 07:56:56 PM

Title: என் அம்மா !
Post by: joker on May 10, 2025, 07:56:56 PM
ஆயிரம் வார்த்தைகளுடன்
எழுதி முடித்தாலும்
ஈடு இணை இல்லை
இவள் அன்பு

இவளை அழைக்கும் பெயரோ
மூன்று எழுத்தில்
சுருங்கிவிடும்
இவள் உலகம் போல்
ஆனால்
இவள் அன்பை
அடைக்கும் தாழ் இல்லை
இவ்வுலகில்

நாம்
வீட்டிற்கு வருகையில்
தன் சிரிப்பாள்
இதயத்தை
நிரப்பிடுவாள்

எல்லாவற்றையும்
பகிர்ந்துகொள்வேன்
அவளிடம்
பார்த்த சினிமா
பழகிய பேசிய தோழிகள் உட்பட
அமைதியாய் எதற்கும்
ஆட்சேபம் சொல்லாமல்
கேட்டுக்கொண்டிருப்பாள்

ஒவ்வொருநாளும்
தூங்கசெல்லும்போதும்
நாளைய நாள் மலரும் உனக்காய்
என்ற நம்பிக்கையை
விதைப்பாள் நம் மனதில்

நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடிக்கு பின்னும்
அவள் இருப்பாள்

ஏழு கழுதை வயசாச்சிடா உனக்கு
என்று திட்டனாலும்
அன்பாய் சோறூட்டிடுவாள்
அவள் மடியில் கிடக்க
அவள் தலை கோதுகையில்
நம் துன்பங்கள் ஓடோடிவிடும்
மாயக்காரி அவள்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு
தாலாட்டு பாடி
நம்மை தூங்கவைத்திடுனும்
முடிவில்லா பாடல்
அவள்

ஒருவேளை
அம்மா என்பது
பாடல் அல்ல
ஒரு பிரார்த்தனை

வரம் கிடைக்க
பிரார்த்திக்க வேண்டும்
வரமாய் நீ கிடைத்த பின்னும்
தொடர்ந்து பிரார்த்திக்கிறேன்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
வேண்டும் நீயே
என் அம்மா

HAPPY MOTHER'S DAY  !

****JOKER***