FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 08, 2025, 04:43:08 PM

Title: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Mr.BeaN on May 08, 2025, 04:43:08 PM
பிறை நெற்றி சூடும் பொட்டாகி
விழி இரண்டில் மலரும் மொட்டாகி
செவி நுழைந்து கவரும் மெட்டாகி
உவகையுடன் உடுத்தும் பட்டாகி
உன் கூந்தல் கலைக்கும் காற்றாகி
நீ உண்ணும் உணவின் நாற்றாகி
கரிசனத்தில் கனிவின் ஊற்றாகி
மனம் மயக்க உந்தன் மாற்றாகி

உன் உலகம் சுற்றும் வானாகி
உன் கரத்தை பற்றும் ஆணாகி
நீ கொள்ளும் காதல் தானாகி
உனக்கெல்லாம் இங்கே நானாகி
என் காலம் கடத்திடவே தோன்றும்
இக்கனவும் மெய்ப்படவே வேண்டும்.
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Yazhini on May 08, 2025, 05:04:50 PM
வாசிக்கவே அழகா இருக்கு...👏👏👏 அருமையான நடை...
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Mr.BeaN on May 08, 2025, 05:34:59 PM
Nandrigal pala thozhi
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Vethanisha on May 08, 2025, 05:55:32 PM
Nice one 😇
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Mr.BeaN on May 08, 2025, 05:58:10 PM
Thank you
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: SweeTie on May 08, 2025, 08:35:56 PM
கவிநடையால்  பித்தாக்கி 
iவார்த்தைகளால்  விருந்தாக்கி 
ஒப்பனையால்  மருந்தாக்கி
மனதை கவரும் கவியாக்கி
எங்கள் மனதை  மகிழ்ச்சியாக்கிய
உங்களுக்கு  வாழ்த்துக்கள்
Title: Re: கனவு மெய்ப்பட வேண்டும்
Post by: Mr.BeaN on May 08, 2025, 08:54:47 PM
Hello jo milka nandri
Ungalai vidava ithu nalla irikku🤣