FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 08, 2025, 12:34:21 PM

Title: நான் போகிறேன்...
Post by: Mr.BeaN on May 08, 2025, 12:34:21 PM
மின்னும் நிலவினையே
மேகமொன்று மறைத்து விட
காற்று தள்ள மேகம்
கலைந்து புவிதான் ஜொலிக்கும்

அதுபோல் உன் செயலும்
எந்தன் காதல் தள்ளிவிட்டு
காமம் தோன்றி விட்டால்
கவிழ்ந்து தான் போவேனே

என்றே நான் பயந்து
உன்னை விட்டு விலகிடவே
நெஞ்சை கல்லாக்கி
நித்தமும் நான் தான் கலங்கி

அத்தனை துன்பங்களும்
ஆழ்மனதில் புதைத்தபடி
அன்பே உன்னிடத்தில்
என்னை விட்டு போகின்றேன்..
Title: Re: நான் போகிறேன்...
Post by: Vethanisha on May 08, 2025, 05:58:33 PM
😇😇 arumayana kavithai