FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on May 08, 2025, 11:46:58 AM
-
விழுந்தாலும் விடாமை வேண்டும்
தோல்வி தெரியாமல்
வெற்றி தேடாதே.
தோல்வி வந்தால்
நம்மைத் தட்டி எழுப்பும்,
வெற்றிக்கு நல்ல வழி காட்டும்.
தோல்வி ஒரு ஆசான்,
வெற்றி ஒரு பரிசு.
பாடம் இல்லாமல்
பரிசு வராது.
அது கசப்பாய் இருக்கும்,
ஆனால் நன்மை தரும்.
தோல்வி அறியாதவன்,
வெற்றி அறிய மாட்டான்.
வலிமை தோல்வியில் தான்,
வெற்றியும் அதனுடனே வந்திடும்.
வென்றவன் எப்போதும்
தோல்வி கண்டவனே,
தோற்றவன் தான்
நாளைய வெற்றியாளன்.
விழுந்தாலும் விடாமை வேண்டும்,
அப்போதுதான் வெற்றி நம்மை சேரும்.
தோல்வியை நேசி,
பயம் கொள்ளாதே,
அது தான் வெற்றிக்கு சாவி.