FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on May 07, 2025, 06:46:51 AM

Title: அன்பு
Post by: SweeTie on May 07, 2025, 06:46:51 AM
  அர்த்தமில்லா  வாழ்க்கையில்
அன்புக்கு  ஏங்கும் இதயங்கள் ! 
இன்று நீ என்னுயிர்  என்பார்
நாளை  நீ யாரோ என்பார்
அன்பு போலியானதா?  இல்லை
மனிதன் போலியானவனா?
இரண்டுமே இல்லை  என்பாரும்
இரண்டுமே  என்பாரும் 
வாழ்வதும்   இங்குதான். 

கண்களில்  ஈரமும்
நெஞ்சினில்  பாரமும் சுமக்கும்
பாவப்பட்ட ஜீவன்கள்
பரிதவிப்புகள்  மறையும்
புதியாதோர் உலகம் 
கண்முன்னே தெரியுமென
பிரமையில்  வாழ்ந்தே 
காலம் கழிகிறது 

காதலை  பிச்சை கேட்கும்
களங்கமிலா  யாசகன்
உறைந்துபோன  கற்பாறைகளில்
நீர்த்துளி தேங்கி நிற்குமென
காணும்  பேராசைக்கனவுகள்
கானல்நீர்தான்ப என்றுமே 
 
Title: Re: அன்பு
Post by: joker on May 07, 2025, 12:19:17 PM
அன்பிற்காய்ஏங்கும் பலர் இருப்பதும் இங்கு தான்
அன்பிற்காய் எதுவும் செய்ய துணிபவர் இருப்பதும் இங்கு தான்

ஏங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை
கிடைப்பவர்கள் சிலர் அருமை தெரிவதுமில்லை


தொடர்ந்து எழுதுங்கள் சகோ