காலம் நூறு கடந்தாலும் களைந்து போகாத
ஒரு உன்னதமான உணர்வு நட்பு
சொந்தங்கள் பல நிறைந்தாலும் உன்
மனதை ஆளும் உண்மையான அரசன் நட்பு
பறந்து விரிந்த இந்த பூமியில்
உனக்க இருக்கும் ஒரே இடம் நட்பு
கவலைகள் உன் கண்களை நனைக்கும் போது
அதை துடைக்க வரும் முதல் விரல் நட்பு
உயிர் பிரியும் வரை உன்னை உண்மையாக
காதலிக்க வைக்கும் அழகான தேவதை நட்பு
அந்த காற்றுக்கு தெரியாத தூசியை சிறைபிடித்து
உன் கண்களை காக்கும் இமைகள் நட்பு
உனக்குள் கலந்து உனக்க துடிக்கும்
இன்னொரு இதயம் நட்பு
பசிக்கும் வேளையில் பக்குவமாய் பால் ஊட்டும்
இன்னொரு தாய் நட்பு
மொத்தத்தில்
நான்கு பேரது தோளில் நீ நகர்வலம்
செல்லும் போது உன்னோடு
தோள் சாயவும் ஆசைபடும்
சேர்ந்து மண்ணோடு புதையவும் ஆசைபடும்.
இந்த மாதிரியான நட்பை கொடுத்த இந்த இணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக கடமை பட்டு இருக்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி!!!!!!