FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on May 05, 2025, 11:22:06 AM

Title: நம்பிக்கையின் நிழல்
Post by: Thooriga on May 05, 2025, 11:22:06 AM
நம்பினேன் உனை...
நல்லவனென்று நினைத்தேன் நான்,
நட்பினை நேசித்தேன்...
நரகமாய் மாறும் நாளென்று தெரியாமலே.

ஒரே பாதையில் நடந்தோம் நாம்,
ஒரே உணவு, ஒரே சிரிப்பு,
உன்னோடு என் இரக்கம் வளர்ந்தது,
ஆனாலும்... உன்னுள் என் நிழலும் இல்லை.

என் ரகசியம் உனக்கென்று சொன்னேன்,
என் கண்ணீரை கூட உனிடம் ஒப்புக்கொண்டேன்,
ஆனால் நீ என்ன செய்தாய்?
அதை கைத்தட்டலோடு உலகிற்கு சொன்னாய்!

வெளியில் ஒரு மையல் சிரிப்பு,
உள்ளே ஒரு விஷ பூச்சி போல...
மெதுவாய் கொன்று விட்டாய் என் நம்பிக்கையை,
அது என் உள்ளத்தில் இன்னும் அழுகும்!

நீ இல்லாமல் வாழ்க்கை எனக்கு சிறந்ததுதான்,
ஆனால் அந்த காலம்... அதுவே என் பழி!
நான் நம்பியது என் தவறல்ல,
நீ துரோகம் செய்ததே உன் குற்றம்!

இப்போது உன்னைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது,
ஏனெனில் இழந்தது ஒரு தோழன் அல்ல,
மாறாக...
காப்பாற்றப்பட்டது.....என் மனதை வாட்டிய நபரிடம் இருந்து!
Title: Re: நம்பிக்கையின் நிழல்
Post by: joker on May 05, 2025, 11:56:37 AM
என்றும்
ரகசியம்
காப்பாற்றப்படும்
அது
நம் மனதிற்குள்
இருக்கும்வரையே

நிழலை கூட
நம்ப மறுக்கும்
காலம் இது

முறிந்தது
அங்கு
நட்பல்ல
நம்பிக்கை


தொடர்ந்து எழுதுங்கள்  சகோ