FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on April 24, 2025, 09:45:06 PM

Title: மன்மதன்
Post by: Mr.BeaN on April 24, 2025, 09:45:06 PM
அன்பினை அம்பாக்கி
வில்லென தான் எய்ய
இலக்கென எதிர்படும்
மனங்களை அது கொய்ய
அளவென ஏதுமின்றி
பிழையதின் பொருளுமின்றி
எல்லைகள் தான் கடந்து-பெண்
பிள்ளைகள் மனம் நுழைந்து
சொல்லிலே சுவை கலந்து
கள்ளென மதிமயக்கி
அன்பெனும் காதலினால்
அகிலத்தை ஆள்பவனே...