FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on April 24, 2025, 07:35:56 PM

Title: மன்னிப்பு !
Post by: joker on April 24, 2025, 07:35:56 PM
ஓருவரின் மனதில்
குவிந்திருக்கும்
கோபக் குவியல்
ஒரு நொடியில்
கரைத்துவிட
சிறிய வார்த்தையே
போதுமானது

சில நேரம்
அந்த சிறிய வார்த்தையை விட
குழந்தையின்
சிறிய புன்னகையே
போதுமானதாகிறது

சராசரி வாழ்வில்
ஒருவரின்
கண்களைப் பார்த்து
நேர்மையான
மன்னிப்பு கேட்பது,
இழந்த நட்பையும்
உறவுகளையும்
மீட்டெடுக்கும்.

ஆனால்
மனிதனுக்குள் இருக்கும்
பொறாமை தான்
தடையாக இருக்கிறது

அப்படித்தான்
எத்தனையோ உறவுகள்
சில அற்ப காரணங்களுக்காக
முறிந்து போகின்றன

ஆணவம்தான்
உறவுகளை
ஆழமான
வலியில் தள்ளுகிறது

மன்னிப்பு
கேட்பதன் மூலமும்
சிறிய சிறிய விட்டுக்கொடுப்பதனாலும்
அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்

மன்னிப்பு என்பது
அது ஒரு சிறிய வார்த்தை அல்ல.
அது ஒரு பொதுவான வார்த்தையும் அல்ல

இது மக்களிடையே
அமைதிப் பாலத்தை அமைக்கும்.
இது மக்களிடையே
வெறுப்புக்கான கதவை
என்றென்றும் மூடக்கூடும்.

மன்னிக்கும்
மகத்தான  செயலுக்கு
ஒருவரின்
மன முதிர்ச்சி தான்
திறவுகோல்.!



***Joker******
Title: Re: மன்னிப்பு !
Post by: SweeTie on April 25, 2025, 09:15:56 PM
ஆம்   மன்னிப்பு என்ற வார்த்தையில்  அடங்கிவிடுகிறது  ஆணவம்   
அருமை உங்கள் கவிதை
Title: Re: மன்னிப்பு !
Post by: joker on April 28, 2025, 12:29:27 PM

ungal karuthuku mikka Nandri ---SweeTie  :)