FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 16, 2012, 12:39:38 PM

Title: நினைவின் இனிமை .....
Post by: supernatural on April 16, 2012, 12:39:38 PM
கதிரவன் இதமாய் படரும்...
அதிகாலை வேலை ....
பொன்வண்ண கதிர்களின்....
ஆக்கிரமிப்பு...
பனிதுளியால் நினைந்த
புது மலர்க்கூட்டம்......
பறவைகளின் அணிவகுப்பு ...
குயில்களின் இசை பாட்டு...
லேசான குளிர் காற்று...
இயற்கையின் ரசனையை...
ரசிப்பதே அருமை......
இந்த தனிமையிலும்...
மனதிற்குள் ஒரு இனிமை

இதயத்தின் இடப்பக்கம்
இடைவிடாது துடிதுடிக்கும்
இதயத்துடிப்பாய் உன் நினைவு
இதமான பொன் நினைவு ..

உன் நினைவு ஒன்றே
இத்தனை இனிமை என்றால்
நிஜத்த்தில் என் அருகே
நீ இருந்தால் .....
அடடா ! அந்த பொழுதோடு
இந்த ஆயுள் போதும் எனக்கு ...
Title: Re: நினைவின் இனிமை .....
Post by: Jawa on April 16, 2012, 05:41:14 PM
Azhagana varigal nature....  :) :) :) :)