FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on April 12, 2025, 12:18:21 PM

Title: என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை !
Post by: சாக்ரடீஸ் on April 12, 2025, 12:18:21 PM
அக்கா மகளின் அழுகை !

விளையாட்டில் சேர்க்கவில்லை,
வலியால் விழிகள் நிறைந்தன.
இரவு தூக்கமே வரவில்லை,
அம்மாவின் சொல்லில் தஞ்சம்.

காலை வந்ததும் அப்பாவை பார்த்து,
"என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை"
என்று சொன்னாள் மெளன குரலில்.
பிஞ்சு உள்ளம் சுருங்கியது,
விழிகள் தேடின நிம்மதி காண.

- சாக்கி