FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 12, 2025, 11:22:14 AM

Title: இந்த மாதிரியான போஸ்ட் யாருக்கும் பிடிக்காது என்பது தெரியும்...
Post by: MysteRy on April 12, 2025, 11:22:14 AM
(https://i.imgur.com/Yq9AjZ2.jpeg)

இந்த மாதிரியான போஸ்ட் யாருக்கும் பிடிக்காது என்பது  தெரியும்... பார்ப்போமே எத்தனை பேர் இதை முழுசா படிக்குறாங்கன்னு..

ஒரு பெண் போடுகிற 'குட்மார்னிங்' போஸ்ட்டுக்கு கிடைக்கற ரெஸ்பான்ஸ்..

ஒரு பெண் போடுகிற ஏதாவது ஒரு மொக்க ஸ்டேடஸ்க்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ்..

நடிகர் நடிகைகளின் புகைப்படங்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்..

சினிமா செய்திகளுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்..

ஜோக் போஸ்டுகள், ஒரு நபரை கலாய்க்க போடப்படும் டாக் போஸ்டுகளுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்..

ஐபிஎல் கிரிக்கெட் போஸ்டுகளுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்..

காதல் , கவிதை போஸ்டுகளுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்...

இவை அனைத்திற்கும் தரும் ரெஸ்பான்ஸில் கால்வாசி கூட சமூக நலன் போஸ்டுகளுக்கும் விவசாயம் , நியூட்ரினோ , ஸ்டெர்லைட் , விழிப்புணர்வு செய்திகள் இவற்றிற்கு கிடைபதில்லையே ஏன்?

அனைவருக்கும் பொதுவான தகவல்கள் பகிரபடுவதில்லையே ஏன்?

ஆண்கள் கூட இதற்கு ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் ஏன் பெண்கள் முன்வருவதில்லை ?

காலையில் வெறும் குட்மார்னிங் போஸ்ட்டுக்கு செலவிடும் நேரத்தில் ஏன் ஒரு விழிப்புணர்வு தகவலை பகிர்ந்து குட் மார்னிங் பெறலாமே... ஏன் பெண்கள் செய்வதில்லை ?

இதற்காக நடிகர், நடிகை, பூங்கொத்து, இயற்கை காட்சிகளையும் பயன்படுத்தும் நீங்கள்  விழிப்புணர்வு தகவலை பகிரத் தவறுவது ஏன் ?

உங்களுக்கு தேவை வெறும் லைக்குகளும் வெட்டி கமெண்டுகள் மட்டும்தானா?

சமூக வலைதளம் நட்பை பெருக்க மட்டுமல்ல.. நாட்டை வளமாக்கவும் தான்.. இதில் மட்டுமே உலகில் உள்ள அனைவரும் சங்கமிக்கிறோம்..

தன் போஸ்டுகளுக்கு எவ்வளவு லைக் எவ்வளவு கமெண்ட்ஸ் வருமென்று அதை பதிவிட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ நன்றாக தெரியும்..

உங்களது போஸ்ட் அதிக நபர்களை சென்றடைகிறது என தெரிந்தும் அதை வெட்டியான விசயங்களுக்கு பயன்படுத்துவது ஏன்?

மாற்றம் அனைவரும் மாறினால் நாம் மாறுவோம் என்பதல்ல... நாம் மாறினால் அனைவரும் மாறுவர் எனும் நம்பிக்கையே..

மாற்றங்கள் நம் தமிழ் தாயகத்திற்கு இச்சூழ்நிலையில் அதிகம்  தேவை..

எறும்பு ஊற கல்லும் தேயும் என்பர்.. உங்களது பதிவு எங்கோ உள்ளவரை சிரிக்க ரசிக்க வைக்க முடியுமெனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா?

சிந்தியுங்கள் சிந்தனையை மாற்றுங்கள்...

ஒரு விழிப்புணர்வு தகவலுடன் ஒவ்வொரு நாளையும் சந்தியுங்கள்...
Title: Re: இந்த மாதிரியான போஸ்ட் யாருக்கும் பிடிக்காது என்பது தெரியும்...
Post by: சாக்ரடீஸ் on April 12, 2025, 01:18:22 PM
Alea mam 🍀 super post mam, but oru sila points la udanpaadu illa ..Inga ipo girlsthan athigama social message post poduranga boys ah vida ..xample namba forum than philosophy of love, oru kutty stry, angel number, vivekanandar, sir cv raman, amazing facts, cooking recipes most of post ellame girls than poduranga.. so that intha post la girls ah mattum sollurathula udanpaadu illa ...boys n girls rendu perukumae  social responsibility venum 😇