FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on April 11, 2025, 06:13:29 PM
-
(https://i.ibb.co/tPD9vmHm/IMG-20250411-WA0004.jpg) (https://ibb.co/PzgdPmrm)
Photo courtesy : Meta AI
மனிதன் – ஒரு முகமூடி கலைஞன்
சமூகத்தின் மேடையில்
மனிதன் பல முகங்கள் அணிகிறான்.
ஒவ்வொன்றும்,
பார்வைக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால்,
அவை அனைத்தும் யதார்த்தமல்ல.
உண்மை முகம் ஒன்று தான்
அவர் நெருக்கமானவர்களிடம் மட்டும் காணப்படும்.
அது வெறும் முகம் அல்ல,
அது அவரது அகம்.
மௌனமாக பேசும் அந்த முகம்தான்
மனிதனின் உண்மையான அடையாளம்.