FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on April 05, 2025, 08:49:23 PM

Title: பெண்ணின் அன்பு !
Post by: joker on April 05, 2025, 08:49:23 PM
ஒரு பெண்ணின் மனம்
சிறிய விஷயங்களைப் பற்றி
அவள் தன் கணவனிடமோ, காதலனிடமோ
புகார் சொல்கிறாள் எனில்

அவளுக்கு உங்கள்
அன்பு தேவை படுகிறது
அவளுக்கு உங்கள்
அரவணைப்பு தேவை படுகிறது
அவளுக்கு உங்கள்
கவனிப்பும் தேவை படுகிறது
என அர்த்தம்

அவள் பேச்சை நீங்கள்
கவனிக்காமல் இருக்கும்போது
அவள் உங்களை
விட்டு விலகுகிறாள்
மிகுந்த மன வலியுடன்
அவள் உங்களுடனான
தொடர்பை தவிர்க்கிறாள்

அவள் பேச்சை
சிறுது காது கொடுத்து கேட்க
சிறுது அன்பும் அக்கறையும்
கொடுத்து பாருங்கள்
அவள் ஒரு போதும் உங்களை விட்டு
பிரிய நினைக்க மாட்டாள்

அவள் புகார்களை
நீங்கள் நிராகரிக்கும் போது
நீங்கள் அது வரை வெளிப்படுத்திய
அன்பும் அக்கறையும்
ஓர் நாடகமோ என அவள் மனம்
சிந்திக்க தொடங்குகிறது
உங்கள் இதயத்திலிருந்து
அவள் தன்னை விடுவிக்க முயல்கிறாள்

இதெற்கெல்லாம்
நீங்கள் சொல்லும்
காரணம்
நேரமின்மை

பல காரணங்கள் சொல்லி
சமாதானப்படுத்த முயலும்
ஆண்கள்  மனம்

அதை பச்சை பொய்
என உணர்ந்துகொள்ளும்
பெண் மனம்

ஒரு பெண்ணின்
உண்மையான காதல்
அதை உணராமல் ஒருமுறை
நீங்கள் தட்டி கழித்தால்
பின் அவள் உங்கள்
கண் பார்வைக்கு
எட்டா தூரம் சென்று விட
எத்தனிக்கும் அவள் மனம்

அவளின்
உண்மையான
அன்பை ,காதலை
நீங்கள் அங்கீகரித்தீர்கள் எனில்
அவ்விடம் அவள்
சொர்க்கத்தை கொண்டு வருவாள்


****JOKER****
Title: Re: பெண்ணின் அன்பு !
Post by: joker on April 19, 2025, 06:34:46 PM
ஒரு பெண்
தன்  உறவுகள்
நிலைநிறுத்தவதற்காய்
பூமியை போல
பொறுத்துக்கொள்வாள் 

ஆனால்
அந்த உறவில் தான்
ஏமாற்றப்பட்டதை
அவள் அறிந்தவுடன், அவள்
அதே நபரின் உதடுகளிலிருந்து
அந்த உண்மையை அறிந்ததும்
அந்த நபர் யோசிக்கும் முன் 
அவ்வுறவுகளை வெட்டிவிட்டு
வெளியேறிடுவாள்

மற்றவர்களின்
வார்த்தைகளை மட்டும் கேட்டு
தனது உண்மையான உறவை
கைவிடாத ஒரு பெண்
எல்லாவற்றையும்
பொறுத்துக்கொள்வாள்,
ஆனால்

வேறொருவர்
அவள் இடத்திற்கு
வந்ததை உறுதியாகும் நிமிடம்
தொடங்கும்
அவ்விடம் விட்டு
அவள் பயணம்

பின் மீண்டும்
அவ்வுறவில் இணைவதை
அவள் மரணம் வரை
நினைக்கமாட்டாள்

பெண் போல
பலசாலி இவ்வுலகில்
யாருமில்லை
அக்னிக்கு இணை
அவள் கோபம்

எல்லாரிடமும்
அனுசரித்து வாழ
ஆசைகொள்வாள் 
அன்பிற்காய்
எதையும் பொறுத்துக்கொள்வாள்
சகித்துக்கொள்வாள்
ஏமாற்றத்தை தவிர


****JOKER****
Title: Re: பெண்ணின் அன்பு !
Post by: Vethanisha on April 21, 2025, 06:42:35 AM
😂 yeas exactly 💯

வேறொருவர்
அவள் இடத்திற்கு
வந்ததை உறுதியாகும் நிமிடம்
தொடங்கும்
அவ்விடம் விட்டு
அவள் பயணம்