FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 28, 2025, 03:37:52 PM

Title: அரசியல் பேசு!
Post by: Vethanisha on March 28, 2025, 03:37:52 PM

அரசியல் பேசு!

நல்லாட்சி வந்தால் மட்டுமே
மலர்ந்திடும் நாடு  !
சமத்துவம் கண்டால் மட்டுமே
உயர்ந்திடும் வாழ்வு !
மக்களுக்குப்  புரிந்தால் மட்டுமே 
அது சிறந்த ஓட்டு !


நாளை நம் கையில்
மாற்றம் நிகழ்த்த!

அரசியல் பேசு!

VethaNisha.M   
Title: Re: அரசியல் பேசு!
Post by: Vethanisha on July 21, 2025, 12:36:10 PM
100 வெள்ளி காசிற்கே 
விலை போகும் மக்கள்
இருக்கும் வரை
 
குரல் கொடுத்தும் ,
எதிர்த்து நின்றும் ,
முன்னின்று பேசியும்
எப்பயனும் இல்லை
 இறுதி வரை! 

அரசியல் ஆளுமையை
அச்சடித்த காகிதம்
நிர்ணயிக்கும் வரை
எந்த போராட்டத்திற்கும்
அர்த்தமும் இல்லை!