FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on March 23, 2025, 12:34:44 AM
-
கோபம், வெறுப்பு, இவற்றிற்கு அப்பாற்பட்டது, உன் மீதான அன்பு,
நித்திரையில் நித்தம் நினைக்கும் நிஜம் நீ!
நீ இருக்கும் மனத்தில், கவிதைகளும் பிறக்கும்,உன் கனிவான பார்வையில் காதலும் மலரும்.!
உள்ளதை பேசும், அன்பின் வலிமை அதிகம் தான், ஆனால் அன்பை வெளிப்படுத்த, வார்த்தைகள் வெறுமனே கிடைத்து விடுமா என்ன?
நலம் விசாரிப்போடு முடிந்து விடும், உன் பேச்சின் மௌனம் கலையாதா, என்ற ஏக்கங்களுடனே நகரும் நாட்கள்!
கற்றுக் கொள்ள உன்னில் ஆயிரம் இருக்க, கடந்து செல்ல முடியாமல், உன்னையே பின்தொடரும் கால்கள்!
உன் சேட்டைகள் ரசித்து, சலிப்படையா காதலுரும் நாழிகை, என்னையே ஏமாற்ற மனமின்றி, விலகிச் செல்லும் நொடிகள் !
பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..