FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: ஸ்ருதி on April 15, 2012, 04:20:45 PM
-
ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
-
பெண்: எதுக்கு?
-
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
-
=====================================================
-
ஏன் தலைவர் வீட்டு வாசல்ல டாங்கர் லாரி
வந்து நிக்குது?
-
மக்களுக்காகத் தீக்குளிப்பேன்னு சொன்னாரில்லே?
தொகுதி மக்கள் நிதி திரட்டி ஒரு பெட்ரோல் டாங்கரை
அனுப்பி வச்சிருக்காங்களாம்...!
-
=========================================================
-
பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
-
திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
-
============================================================
-
நீங்க வழக்கமா சாப்பிடற கடை காபிதான் ஜீவனுள்ள காபின்னு
எப்படி சொல்றீங்க..?
-
எப்படியும் ரெண்டு ஈ, ரெண்டு எறும்பு நிச்சயம் இருக்கும்...!
-
============================================================
-
டாக்டர், நெஞ்சு ஒரேயடியாக பட படன்னு அடிக்குது..!
எப்போதிலே இருந்து?
உங்க நர்ஸைப் பார்த்ததலே இருந்து...!
-
============================================
-
டிப்ஸ் கொடுக்காதீங்கன்னு எல்லா இடத்திலேயும்
போர்டு தொங்குதே ஏன்?
-
டாக்டர் ஃபீஸைவிட, நர்ஸ்களுக்கு டிப்ஸ் எக்கச்சக்கமா
கெடைச்சுதாமே...அதான்..!
-
ஏண்டா..இத்தனூண்டு பையன் நீ....அப்பாவையே எதிர்த்து
பேசறியா..?
-
போங்க டாடி...இத்தனூண்டு நாடு இலங்கை. ஐ.நா.வையே
எதிர்க்கலையா..!
-
=======================================================
-
டாக்டர் உடம்பு சரியில்லை...!
-
நல்லாதானே இருக்கு...?
-
நான் நர்ஸோட உடம்பை சொன்னேன்...!
-
=======================================================
-
என் பின்னாடி பசங்க பைத்தியமா சுத்தறாங்க...!
-
ஆல்ரெடி பைத்தியமா? சுத்த ஆரம்பிச்ச பின்
பைத்தியமா..?
-
-
சொத்தை பல்லை பிடுங்க எவ்வளவு ரூபாய், நல்ல
பல்லை பிடுங்க எத்தனை ரூபாய்?
-
நல்ல பல்லை ஏன் பிடுங்கணும்?
-
சாரி டாக்டர், நீங்க போலி டாக்டரானு டெஸ்ட் பண்ணிப்
பார்த்தேன்..!
-
======================================================
என்னது, அந்த டாக்டர் உன் சொத்தையே பிடுங்கிட்டாரா?
-
ஆமாம், அவர் பல் டாக்டராச்சே..!
-
-
நம்ம தலைவர் போதையில் இருக்கார்னு எப்படி சொல்றே?
-
மனித சங்கிலியை அடகு வைத்தாவது கட்சியை மீட்பேன்னு
உளர்றாரே..!
-
——————————————–
-
தமிழ் சினிமாவுக்குப் பாட்டெழுத எப்படி தேர்வானீங்க?
-
எனக்கு நிறைய இங்கிலீஷ் வார்த்தைகள் தெரியும்னேன்…!
-
——————————————
-
சர்வர்…குடிக்க தண்ணி கொண்டாந்து வையுங்க..!
-
எத்தனை டி.எம்.சி வேணும்னு தெளிவா ஆர்டர் பண்ணுங்க சார்..!
-
——————————————–
என்னய்யா…ரெண்டுங்கெட்டான் வேளையில பிச்சை எடுக்கிறே?
-
தோடா, இப்ப என்னோட கலெக்ஷன் டைம்மா, உங்க வூட்டுக்காரரைக்
கூப்பிடுங்க..வட்டிப்பணம் வாங்க வந்திருக்கேன்..!