FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on March 11, 2025, 05:30:02 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2FsXw4RSNM%2FIMG-20250311-160127-965.jpg&hash=9384924429f7885cf91dcf7dd27f33ef7fa8d8d3)
மழையோடு
உரையாடும்
என் மௌனங்கள்
சன்னல் கம்பிகளில்
துள்ளி துள்ளி
விளையாடும்
மழை துளிகள்
கரைந்து போகிறது
கண்டு இருக்கையில்
என் நேரங்கள்
வியந்து ரசித்து
நெருங்கி வந்து
அலுத்துப்போய்
விலகிச்செல்பவர்கள்
மத்தியில்
பிரமிப்பெல்லாம்
நீங்கிய பின்னும்
விலகாமல் உடன்வரும்
உறவொன்று
யாருக்கும் இங்கு
எளிதாய்
வாய்த்திடுவதில்லை.
இருந்தும்
உன்னை திரும்ப
பெறுவேன் என்ற
நம்பிக்கையில்
எழுத படுகிறது
என் கவிதைகள்
வளர்வதற்காகவே
புதைக்கப்படும்
விதைகள் போல
திட்டி தீர்பதிலும்
அன்பை
கொட்டி தருவதிலும்
அவளுக்கு நிகர்
"அவள்"
தான்
****Joker***
-
miga arumai