FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !~Bharathy~! on April 15, 2012, 03:13:12 PM
-
தெய்வீகக் காதல்!
புரிதலை தாயாக்கி
ஆசையை கருவாக்கி
உணர்வுகளை இரத்தமாக்கி
நம்பிக்கையை உடலாக்கி
பேரன்பை உயிராக கொண்டதேதெய்வீகக் காதல்!!
காதல் சரணம்
முன்பின் நேரில்
பார்க்காத,
பழகாத,
அனுபவமின்றி,
இணையவழி
ஆரம்பித்த முகப்புத்தக சந்திப்பு - அது
காதலாக மாற,
காலதாமதமாகவில்லை......
இணைய வலைக்குள் சிக்கிய -அந்த
இதமான காதலுக்கு
மார்கழி வந்தால்
ஈரிரண்டு வருஷம்~~!!!
பள்ளி பருவத்தில் ‘காதல் ‘ என்ற சொல்லையே
பகிஷ்ககரித்த மனம்-அன்று
பணிந்தது அவன் காதல் விண்ணப்பத்திற்கு மட்டும்..
சினிமாவிலும்
நிஜ வாழ்விலும்,
காதலை எதிர்த்து,
நட்புக்கள்,உறவுகளுக்கு
நடுநிலைமை என்றெண்ணி
காதலுக்கு எதிராக கொடுத்த
காரசாரமான வாதங்கள்,
கடும் வாக்குறுதிகள் எங்கே?
சொந்த நாடுவிட்டு ,
சொந்தங்களை பிரிந்து
தனிமையில் வாழ்க்கை
தள்ளாடி நின்றபோது
நிகழ்ந்த மர்மம்தான் -அந்த
நிழல் காதல்......
-
~ அவன்~
காணொளியில் ஒளியில்லாத என் விம்பத்தோடு
போராடிகளைத்த அந்த கண்களை
காவல்செய்யும் மை இன்றிய நெடிய இமைகள், –அதிகம்
கோவப்படே கூர்மையாகிப் போன மூக்கு,
அழுகைக்கே தடைபோடும் உன் சிரிப்பும் பேரழகு~!-இருந்தாலும்
கொடிய வறுமையில்தான் உன்முகம் எப்போதும
ஆங்கிலத்தில் “சீரியஸ்”உன்னால்தான் வந்திருக்கும் போலும்...
கோரிக்கை வைத்தாலும் மாற்றமுடியாது.-ஐயோ!
ஏழைக்கவி எனக்கேது உருவகம்?-உன்
கோடி அழகை அணிசெய்ய........!!!
-
அடேங்கப்பா!
பாரதியின் பெயரை தாம் கொண்டிருக்கின்றாய்
என்றிருந்தேன் ,
வார்த்தைகளின் வனப்பையும்,வரி சமைக்கும் வழி வகையும்
வசம் வைத்திருப்பாய் என்று எண்ணவில்லை .
ஒப்புபவர்கள் ஒப்பட்டும் ,ஒப்பாதவர்
முகம் திருப்பி துப்பட்டும்
எப்படி இதை எடுத்தாலும்
உன் வரிகளுக்கு
என் விமரிசனம்
அருமை,அழகு,
அபாரம்,அபூர்வம்
அஹா , ஆனந்தம்
-
சொந்த நாடுவிட்டு ,
சொந்தங்களை பிரிந்து
தனிமையில் வாழ்க்கை
தள்ளாடி நின்றபோது
நிகழ்ந்த மர்மம்தான் -அந்த
நிழல் காதல்.....
அருமை....மூக்கி ;) ;) ;) ;) :-[ :-[ :-* :-* :-* :-* :-*
-
nala kavithai
-
Nalla kavidhai bharathy..... :) :) :) :) Ungaladhu ithu pondra padaipugalai indha podhu mandram inum neria edhir paarkirathu....
-
ஆசை அஜித் ,ஸ்ருதி ,தர்ஷினி,ஜாவா நன்றிகள் !!
கவிதை படைபதிலோ/அவற்றை இணையத்தில் பிரசுரிபதிலோ உங்கள் அளவுக்கு எனக்கு பாண்டித்தியோமோ/பரிட்சயமோ இல்லை ..
இருந்தாலும் அசைஅஜித்தின் தொடர்ச்சியான மேலான வேண்டுகோள்கள் ,உந்துதல்களுகிணங்க கவிதை என்ற பெயரில் என்றோ ஒருநாள் எழுதிய சிலவற்றை இங்கே பதிவு செய்தேன்.தொடர்ந்தும் எழுத முயற்சி செய்கிறேன்..
.
மீண்டும் நன்றிகள் !!
-
காதலின் வேண்டுதல்[/u]
நம்பு என்னை ===========>கேள்விகளின்றி
நேசிஎன்னை============>எதிர்பார்ப்பின்றி
ஆசைப்படு என்னை=======>அடக்குமுறையின்றி
தண்டி என்னை==========>காயங்களின்றி
கோபப்படு என்னில்=======>கொடியவார்தைகளின்றி
மன்னி என்னை-=========>வஞ்சகமின்றி
இரங்கு எனக்காக=========>பரிதாபமின்றி
உதவு எனக்கு ===========>எதிர்பார்பின்றி
விட்டுக்கொடு எனக்கு======>வேண்டுகோளின்றி
கற்றுக்கொடு எனக்கு=======>கர்வமின்றி
பேசவிடு என்னை=========>பாரபட்சமின்றி
காத்திரு எனக்காக========>காலவரையறையின்றி
காதலி என்னை==========.>நானின்றி……நீயாக!!
-
நம்பு என்னை ===========>கேள்விகளின்றி
நேசிஎன்னை============>எதிர்பார்ப்பின்றி
ஆசைப்படு என்னை=======>அடக்குமுறையின்றி
தண்டி என்னை==========>காயங்களின்றி
கோபப்படு என்னில்=======>கொடியவார்தைகளின்றி
மன்னி என்னை-=========>வஞ்சகமின்றி
இரங்கு எனக்காக=========>பரிதாபமின்றி
உதவு எனக்கு ===========>எதிர்பார்பின்றி
விட்டுக்கொடு எனக்கு======>வேண்டுகோளின்றி
கற்றுக்கொடு எனக்கு=======>கர்வமின்றி
பேசவிடு என்னை=========>பாரபட்சமின்றி
காத்திரு எனக்காக========>காலவரையறையின்றி
காதலி என்னை==========.>நானின்றி……நீயாக!!
வரிகள் நன்று பாரதி....!
பாரதியின் எழுத்துக்களை தொடர்ந்து கானொளியில் காண
ஆவல்.....
-
நன்று பாரதி.... :-*
-
சுவைத்தது
காதல்!...
அறுக்சுவைக்குள்,
உறைப்பும் ,கசப்பும் அதிகம் இருக்மென்பதை
அறியாமலேயே!♒…♒…. ≧◔◡◔≦
-
பெளர்ணமியான என்காதல் வானில்
அமாவாசைகள் தினம் தினம் வந்தது-இன்றது
வானைத் தேடும் நிலவாகியதோ? ☾ ☾ ☾ ☾
மனம்பார்த்து ,குணம்பார்த்து
இதயத்தில் நிச்சயிக்கப்பட்டு
நினைவுகளில் அச்சிடப்பட்ட என்காதல்
கனவுமேடையுடன் கலைந்தது ஏனோ??
-
காதலை ஏன் நீ நாடகமாய் காண்கிறாய் ??
காதலை வாழ்க்கையாய் கொள்
நீ வாழும் காலம் வரை
உன் காதலும் வாழும்
மறைந்த பின்பும், உன்
நினைவோடு காதலும் நிலைக்கும் .
-
உலகமே
நாடகமேடை
நாமெல்லாம்
நடிகர்கள்...என்று சொன்ன
மாமேதை சேக்ஸ்பியர் பொய்யனா?
-
சரித்திர நாயகரை பொய்யராக,
புரட்டு கதை திரட்டிட
முரட்டு மனமோ,இருட்டு இதயமோ
கொண்டவன் நான் இல்லை .
மாறாக,எதார்ததினை மிக எதார்த்தமாய்
எடுத்துரைக்கும் எதார்த்த மாணவன் நான் .
எந்த ஒரு துறையை சார்ந்த எவர்க்கும்
தத்தம் துறையை முன்னிறுத்தி, சமயத்தில்
மிகைபடுத்தி பேசுவதும் எதார்த்தமே.
அதன் அடிப்படையில் தலை சிறந்த
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர்
தன் துறையின் மேன்மையை
மேன்மைபடுத்தி கூறி இருக்கின்றார் .
இதே வில்லியம் ஷேக்ஸ்பியர்
"உலகமே ஒரு சிற்ப பொருட்காட்சி
இதில் இருக்கும் ஆணும் பெண்ணும் சிற்பங்களே "
என்றிருப்பார் தான் ஒரு சிற்பியாக இருந்திருந்தால் ...
அதே வில்லியம் ஷேக்ஸ்பியர்
"உலகமே ஒரு கவிதை தொகுப்பு
இதில் இருக்கும் பெண் அழகு கவிதை என்றும்
ஆண் எழுத்து பிழை, பொருட் பிழை நிறைந்த கவிதை "
என்றிருப்பார், தான் ஒரு கவிஞராக இருந்திருந்தால்
"ஏதோ எனக்கு தெரிந்த கருத்தை எடுதுரைதிருக்கின்றேன் "
அவ்வளவே ....