FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 18, 2025, 10:26:13 AM

Title: கால் விரல்களுக்கும் உங்க ஆரோக்கியத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?
Post by: MysteRy on February 18, 2025, 10:26:13 AM
(https://i.imgur.com/PQld4L6.jpeg)


கால் விரல்களுக்கும் உங்க ஆரோக்கியத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?


நமது பாதம் மொத்த உடலையும் தாங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்றைக்காவது அதன் மீது நாம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறோமா? உண்மையில் கால் விரல்களுக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையில் உள்ள சுரப்பிகள் மற்றும் மற்ற உறுப்புகள் கால் விரல்களுடன் நரம்பு மண்டலங்களால் இணைக்கப்பட்டுள்ளது. எந்த கால் விரல் எந்த உறுப்போடு சம்பந்தப்பட்டுள்ளது என அறிய ஆவலா?

கால் கட்டை விரல் : காலின் கட்டைவிரலில் ஆணிக்கால் வருகிற இடத்தின் மையப்பகுதி, தலை, சைனஸ், கழுத்து, தைராய்டு எனப்படும் சுரப்பிகளுடன் தொடர்புகொண்ட பகுதி.

சுண்டு விரல் : சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி, கைப்பகுதிகளுடனும் அதையடுத்த பகுதி தோள்பட்டைகளுடனும் தொடர்புகொண்டது.

வலது பாதம் : பாதத்தின் விரல்களில் இருந்து முக்கால் பகுதிக்கு வந்துவிட்டால், பெருங்குடல் மற்றும் மலக் குடல் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாகிவிடுகிறது.

இடது பாதம் : இடது பாதத்தின் நான்கு விரல்களுக்கும் கீழுள்ள பகுதி, நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டது. பாதத்தின் நடுப்பகுதி, வயிறு மற்றும் மண்ணீரலுடன் சம்பந்தம் கொண்டிருக்கிறது.
பாதத்துக்கு மேலேயுள்ள மணிக்கட்டு, கருப்பை, பிறப்புறுப்பு, கீழ் இடுப்பு, நிணநீர்ச் சுரப்பி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.

பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் : பாதங்களில் செய்யப்படுகிற பயிற்சிகளால், கால்கள் பலம் அடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல் வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.
செரிமானம் : உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாசப் பைகள், குடல், மூளை, சுரப்பிகள் போன்றவை சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. செரிமானக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படும்.

மலச்சிக்கல் : மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் இருக்கும்; மனச்சிக்கல் இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும் என்பார்கள். எனவே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டால், உடலின் எந்தப் பகுதியிலும் சிக்கல் ஏதும் வராமல் தடுத்துவிடலாம்..