FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on February 03, 2025, 05:49:14 PM
-
கடன் வாங்கியாவது சிரிக்க
நினைக்கிறேன் ஆனால்..
இலவசமாகவே தந்து
செல்கிறார்கள் கண்ணீரை
மட்டும்..
-
நட்புடனே வந்தேன் தோழமையை தந்தாய்!
ஏனென யோசித்தேன் எண்ணம் யாவும் நிறைந்தாய்!
எண்ணங்களில் முப்பொழுதும் நீ என்றேன் காதலைத் தந்தாய்!
தூக்கம் என சொன்னேன் என் கனவுகளை நிறைத்தாய்!
இன்பம் என குதித்தேன் மகிழ்ச்சியில் நீயும் சிரித்தாய்!
துன்பம் என நின்றேன் அன்னை அவள் ஆனாய்!
உன்னை பிரிந்து தவித்தேன் வலிகள் பல தந்தாய்!
வலிகள் எதற்க்கு என்றேன், ஆம் வலிகள் எதற்க்கு
வைத்துக்கொள் இனிமேல் உன் கவிதை நான் என்றாய்
-
இழந்ததாகவே. இருந்தாலும் ஒரு காலத்தில் எண்ணுடியதாக இருந்தது ...
-
கெஞ்சி கிடைக்க கூடாதது காதல் ♥️
பிச்சை எடுக்க கூடாதது அன்பு 🫂 ....
கேட்டு பெற கூடாதது அக்கறை 🥰...
புரிய வைக்க கூடாதது உறவுகள்👩❤️👨
-
என்னை கண்டுகொள்ளாத அந்த பார்வையின் மீது எனக்கு ஏன் அத்தனை காதல்
(https://i.ibb.co/1YLVL7sQ/7873945e373247743ffa78a74f883e42.jpg) (https://ibb.co/1YLVL7sQ)
-
முதல் இலை உதிர்ந்தபோது வலியால் துடித்த மரம்... அடுத்து அடுத்து இலையுதிர்வில் சுதாரித்து கொண்டது ..
இப்பொது கிளையே முதிர்ந்தாலும் துளி கூட வலிப்பதில்லை மரத்திற்கு...
இது மரத்திற்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கும் தான் ...
(https://i.postimg.cc/Wb8cdKXV/download-3.jpg) (https://postimages.org/)
-
நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக ..
நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை .......
-
விதைத்தது அன்பு என்றாலும் இன்று வரை விளைவது கண்ணீர் துளிகளே...
தொலைந்து போக ஆசை படுகிறேன் நான் யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு..
எனக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும் ஏனெனில் என் மனதை காய படுத்த அங்கு யாரும் இல்லை ...
-
உன்னை எவளோ பிடிக்கும்னு கேட்டா எனக்கு சாத்தியமா சொல்ல தெரியாது...
ஆனா உன்ன நேசிச்ச அளவுக்கு நா யாரையும் நேசிச்சதும் இல்ல இனிமேலும் நேசிக்க மாட்டேன்..
வானவில்லாய் என் வாழ்வில் வந்த வாரணஜாலம் நீ..
-
என் நிலை தெரியாமல் காயபடுதியவர்களை விட ...
என் நிலை தெரிந்து காய படுதியவர்கள் தான் இங்கு அதிகம் ...