FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on February 03, 2025, 05:43:48 PM

Title: உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு இருக்கும் தனிச்சிறப்பு!
Post by: MysteRy on February 03, 2025, 05:43:48 PM
(https://i.imgur.com/02ML0yO.jpeg)

உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு இருக்கும் தனிச்சிறப்பு!🇮🇳

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். மதம், மொழி, இனம் மற்றும் வேற்றுமையில்  ஒற்றுமை ஆகியவற்றில் முதலிடம்.

1. உலகில் முதலிடம்:

உலகின் பல்வேறு துறைகளின் இந்தியாவின் முதலிடத்தைப் பார்ப்போம்.

வைர ஏற்றுமதி,

 திரைப்பட தயாரிப்பு,

வாழை உற்பத்தி,

மா உற்பத்தி,

ஆடு மற்றும் எருமை பால் உற்பத்தி,

மாடுகளின் எண்ணிக்கை,

சணல் உற்பத்தி,

சுண்ணாம்பு உற்பத்தி,

இந்தியா பல்வேறு  பட்டியலில் முதலிடத்திலும், பல்வேறு துறைகளில் இந்தியா முதல் ஐந்து இடங்களிலும் உள்ளது.

2. உலக புகழ்பெற்ற இடங்கள்:

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய வரலாற்று தளங்களையும் இங்கே காணலாம்.

தாஜ்மஹால்,

மகாபலிபுரம்

அமிர்தசரஸ்  பொற்கோயில்,

டெல்லி செங்கோட்டை

இந்தியா கேட்,

மைசூர் அரண்மனை

தஞ்சை பெரிய கோயில்

கஜுராஹோ கோயில்

புது தில்லி

இன்னும் இது போன்ற பல  இடங்கள் இந்தியாவில் உள்ளன.

3 பண்டிகைகள்:

உலகின் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் அதிகமான பண்டிகைகள் உள்ளன,

ஹோலி,

வினாயகர் சதுர்த்தி,

தீபாவளி,

துர்கா பூஜை,

கிருஸ்மஸ்

ஓணம்,

பொங்கல்,

ரம்ஜான்

பக்ரித்

புத்த பூர்ணிமா

இன்னும் பல திருவிழாக்கள் இந்தியர்களால் கொண்டாடப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளின் போது சமைக்கப்படும் உணவுகள், அணியப்படும் ஆடைகள் மற்றும் விழாக்கள் கொண்டாடும் விதம் இவற்றை வைத்து  இந்தியா உலகில் தனித்துவமான நாடாக திகழ்கிறது.