FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 24, 2025, 03:33:54 PM

Title: சென்னை!
Post by: joker on January 24, 2025, 03:33:54 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2F3Rcgr9FB%2FSING.png&hash=d65355dcbbc7ab28f68d3d86bcd1db097aa42ddc)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2FDZSKby1T%2FCHEN.png&hash=be9ec23d868282d1fff041737acb0f1b1ce49676)
இப்போதெல்லாம்
சென்னை மாறிவிட்டதாம்

சாலையின்
எல்லா சந்திப்புகளிலும்
இப்போதெல்லாம்
புதிய சிக்னல் விளக்குகள்
பளபளக்கிறது

சிக்னலில் சிவப்பு விளக்குகள்
இதய வடிவ குறியீடாய்
ஒளிர்கிறது
காதல் அபாயமானது என்று
உணர்த்திகிறதோ என்று நினைத்தேன்
அது
உங்களை நேசிப்பவர்கள்
வீட்டில் உள்ளனர் என்று நினைவில்
கொள்ள என்கிறது அரசு
என்ன ஒரு அக்கறை ?!

அதே சிக்னலில்
கையில் நோட்டுப்புத்தகத்துடனும்
பேனா பென்சில் என்று விற்க
பள்ளிக்கு போகும் வயதுடைய
சிறு பிள்ளைகள் கை ஏந்தி நிற்க
அரசின் அக்கறை யார் மேல் என
யோசிக்க வைக்கிறது

நேற்று வந்த பாதை
இன்று  ஒரு வழி பாதை ஆகிறது
முன்பு ஆட்டோ காரருக்கு மட்டும்
தெரிந்த சந்துக்குள் இன்று
அனைவர்க்கும் அத்துப்படி
மெட்ரோ ரயில் பணிக்கு நன்றி
கூடவே google மேப் க்கும்
சில நேரம் வீடு போயி சேர
உதவுவதால்
நன்றிகள்

உலக தர
மருத்துவமனை
உலக தர
நூலகம்
உலகின் இரண்டாவது
மிக நீளமான
கடற்கரை
பூங்காங்கள்
ரோட்டோர உணவகங்கள்
இரவிலும், நடுநிசியில்,அதிகாலையிலும்
திறந்திருக்கும் பிரியாணி கடைகள்
அங்கங்கே உலகத்தில் உள்ள
அணைத்து உணவுகளையும்
கொண்டுள்ள உணவகங்கள்

கால சுயற்சியில் சிக்குண்டு
கிடைக்கும் மாந்தர்களை போலதான்
இந்த சென்னையும் அவ்வப்போது
மாறிக்கொண்டிருக்கிறது
ஆனால்
மாறாமல்
அன்றும் இன்றும் என்றும்
வந்தோரை
வாழ வைக்கும்
சென்னை



****JOKER****