FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 15, 2012, 07:28:06 AM

Title: வா வா வசந்தமே !
Post by: aasaiajiith on April 15, 2012, 07:28:06 AM
வராதவளாய்
வருவதும்
வந்து
வரி  வரியாய் என்
வரிகளை
வாசித்து
வருடி  செல்லும்
வசந்தமே  !
வா வா  !
வருகையின்
வாசிப்பின்
வருடலின்
விலாசத்தை
விடையாய்
வேண்டாம்
விமரிசனமாய்  கூட 
வேண்டாம்
வாசமாய்  ஆவது 
விட்டுசெல்லலாமே !
வசந்தமே
வாடிக்கையாய்
வந்து
வாசிக்கும்  என் 
வரிகளை எனும்
விஷேஷ  கௌரவத்திற்காக  !