FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 22, 2025, 05:33:26 PM

Title: பயணம்
Post by: joker on January 22, 2025, 05:33:26 PM
உன்னுடனான
என் உறவின்
பயணம்
சினிமா பட காட்சி போல
சண்டையில் தான் துவங்கியது

சண்டை என்றால்
வாள் சண்டை எல்லாம் இல்லை
பரஸ்பரம் அறிமுகமில்லாமல்
புரிதல் இல்லாமல்
உருவானது

மெல்ல மெல்ல
பேசிக்கொண்டோம்
ஒன்றாய் பயணிக்க
நிர்பந்திக்க பட்டோம்
அப்போது அறிந்திருக்கவில்லை
இவ்வாழ்வு முழுவதும்
உன் நினைவுகளுடன் பயணிப்பேன் என்று

பல பயணங்கள் உன்னுடன்
மறக்க முடியாத சில
ரயில் பயணங்கள்
பேருந்து பயணங்கள்
ஆட்டோ பயணங்கள்
காரில் பயணங்கள்
அதிகாலை பயணங்கள்
ராத்திரி பயணங்கள்
மழை நேர பயணங்கள் என
நினைவுகளுக்கு இன்றும்
தீனி போட்டுக்கொண்டிருக்கும்
நிகழ்வுகள்

என்ன என்ன கதைகள்
பேசினோம் என்று
நினைவில்லை
பகிர்ந்துகொள்ள நினைவில்
உள்ளதெல்லாம்
பரஸ்பரம்
பகிர்ந்துகொண்டோம்

மழை நின்ற பிறகு
இலைகளின் மேல் தங்கும்
மழை துளிகள் போல
பயணிக்கும் ஒவ்வொரு இடமும்
உன் நினைவுகளை
பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது


****JOKER****
Title: Re: பயணம்
Post by: joker on April 21, 2025, 07:54:23 PM
நம்முடைய
மனசை
அறிந்துகொள்பவர்
நம் அருகில் இருந்தால்
அவர்களது ஸ்பரிசம்
நம் துன்பங்களையும்
கவலைகளையும் அதனிடமிருந்து
மெல்ல காத்திடும்
தொட்டாவாடி இலையை போல

நான் உன்னை
நினைக்கும் போது எல்லாம்
இதயத்தில்
முள் குத்தும் வலி
உணர்கிறேன்

விலகுதலின்
வலி பற்றி நான்
என் இதயத்திற்கு
கற்பிக்க தவறியதால்
இன்னும் நீ
என் மனதில்
நிலைத்திருக்கிறாய்

வாழ்க்கை என்னும்
பயணத்தில்
சில  உறவுகள்
பாதியில்
வந்து சேர்கின்றன
சில உறவுகள்
பாதியில்
விட்டு பிரிகின்றன

அதில்
அன்பு, காதல்
வலி, பிரிவு,
வஞ்சனை , ஏமாற்றுதல்
எல்லாம் அரங்கேறி
செல்லும்

சில விஷயங்கள்
நம்மை அறியாமலேயே
நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.

இருப்பினும்
சிலநேரம்
எவ்வளவு முயன்றாலும்
சிலவற்றை நம்மால்
விட்டுவிட இயலாது
அது
நம் தவறு அல்ல

அது
அவர்
நல்ல இதயத்திற்கு
சொந்தக்காரராக
இருப்பதனால் இருக்கலாம்

அப்படி இருப்பவர் தான்
அதிக ஏமாற்றுதலை
கடந்து பயணிக்க
வேண்டி இருக்கும்



****Joker****