FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 14, 2012, 07:23:18 PM
-
எத்தனை எத்தனை வரி பதித்திருப்பேன்
இன்னும் நம்மை சரியாய் ,சரி வரை
புரிந்துகொண்டதில்லை யாரும் இதுவரை .
புரிந்திருந்தால் ஏனோ , தானாய் ,வீனாய்
மனதிற்குள்ளே ஓரமாய் பெரும் குறை.
பதிப்புகள் புரிந்திருந்தாலும் புரியாவிட்டாலும்
பதில் புரிந்திருந்தாலும் புரியாவிட்டாலும்
என் மன வானில் முப்பொழுதும் நீ வளர்பிறை .
இடையிடையே எத்தனை எத்தனை தடை,திரை
அத்தனையும் வெயில் பட்டதும் விலகும் பனித்திரை .
நம்மை பற்றி ரகசியமாய் ஏதோ ரகசியமாம் !
ரகசியத்தை ரகசியமாய் அறிந்துகொள்ளாமல்
பகிரங்கமாய் செயல்படும் (மன்றத்தில் ) பல துறை
அத்துணை துறைகளும் அலசி ஆராய்ந்தும் கடைசியில்
அலுத்தும் அசந்தும் போனது அவ்வளவாய் இல்லை மன நிறை
(விக்கிலீக்ஸ்) அசாஞ்சே வே அசந்து வீழ்ந்து போனதுதான்
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ஆதலால் முழு மன நிறை
சிரிப்போர் சிரிக்கட்டும் ,ரசிப்போர் ரசிக்கட்டும் , முகம்
சுழிப்போர் சுழிக்கட்டும்,
எவருக்கும் இங்கு இல்லை வரை முறை, நெறிமுறை
உள்ளூர் உளவுத்துறை ,உள்துறை,புலனாய்வுத்துறை
இவை மூன்றும் களத்தில் குதிக்காதவரை
நமக்கும், நாம் இரகசியத்திற்கும் இருக்காது ஒரு குறை !