FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 14, 2024, 08:05:10 PM
-
ஒழுகாத
மேற்கூரைக்கு
ஆசைகொண்டேன்
பட்டினியில்லா
ஓர் பொழுதை தானே
நான் யாசித்தேன்
வேறில்லை
கிழியாத சட்டை ஒன்று
வாங்க கிடைக்கும் தானே
ஊரில் !?
பால் இல்லாத தேநீரில்
சிறிது இனிப்பை தானே
எதிர்பார்த்தேன்
கூந்தலில் தேய்க்க
எண்ணெய் கேட்க
கையில் அழுக்காகுமாம்
சூடு சோறு நான்
கண்டது
பண்டிகையின்
நாள் ஒன்றில்
என்றும் புளி கரைசல் சாப்பிட்டு
மடுத்துவிட்டதென்றால்
சாலையோரத்தில்
புளி மட்டுமே
விழுந்து கிடக்கிறது என்கிறாள்
வயறு நிறைந்து
ஏப்பம் வந்தது
ஓர் நாள் எஜமானனின்
அன்னதானத்தில்
தின்ற பொழுது,
நான்கு சுவற்றுக்குள்
விம்மிக்கொண்டிருந்த
பசிக்கு
விமோசனம் கிடைத்தது அப்போது
கண்ணீரில்லா
இரவுகளில்
நன்றாக தூங்கினேன்
என்கிறாள் அம்மா
முடிந்தவரை இருக்கின்றவற்றை
எனக்கு அன்பாய் தந்து
பசியை விழுங்கியவள் அவள்
இன்று கொஞ்சம்
மெச்சப்பட்ட வாழ்க்கை
எனினும் நினைவுகள்
அதை தினமும்
அலசிக்கொண்டிருக்கிறது
பொக்கிஷமாக
***JOKER***