FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 13, 2024, 08:05:16 PM

Title: ஆண்களில் நல்லவன் யார் ?
Post by: joker on December 13, 2024, 08:05:16 PM
ஆண்களில் நல்லவன் யார் ?

சற்றே தாமதிக்காமல் வரும் பதில்
அப்படி யாருமில்லை என்பதாய் தான்
இருக்கும்

சற்று யோசித்தால்
தந்தையின் முகமும்
சகோதரனின் முகமும்
சிலருக்கு நண்பர்களின் முகமும்
வெகு சிலருக்கு என்றோ ஏதோ பொழுதில்
உதவிய முகமறியா உருவமோ வந்து
செல்ல கூடும்

இது இப்படி இருக்க
உங்களுக்கு தெரிந்த பத்தினி யார்
என்ற கேள்விக்கு
பலரது உடனடி பதில்
கண்ணகி யாக தான் இருக்கும்
தாயின் பெயரும்
தாரத்தின் பெயரும்
சகோதரியின் பெயரும்
நண்பிகளின் பெயர்கள்
ஏனோ தாமதமாக வரும்

இது ஏன்
நம் கல்வி  முறையின் தாக்கமோ ?
காலாச்சார சீரழிவோ ?
புரிதலின்மையோ?
பரஸ்பரம் ஏற்படும் நம்பிக்கையின்மையோ ?

விடுதலையாகி 75 வருடமாகிவிட்டதாய்
மார்தட்டி கொள்ளும் நாம்
இன்னும் மார்பின் குறுக்கே  கை கட்டி 
கூனி குறுகி ஒடுக்கப்பட்ட ஓர்
சமூகத்தினூடே கண்டும் காணாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

படித்தவன் எல்லாம் அறிவாளியுமல்ல
படிக்காதவன் முட்டாள்களுமல்ல

இதில் நாம், யாராய் இருக்க என
எண்ணி தெளிவடையுங்கள்
மேலோட்டமாய் வாழ்வதை விட
ஓர் புரிதலோடு வாழ பழகுவோம்
புதிதாய் ஓர் சமூகம்
உருவாக்குவோம்


JOKER