FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 02, 2024, 11:02:35 AM

Title: *நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!* காபியை போன்று...
Post by: MysteRy on October 02, 2024, 11:02:35 AM
(https://i.ibb.co/vqHxhTw/FB-IMG-1727846834562.jpg) (https://ibb.co/546WkSM)


நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்.

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்.
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்.

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது. அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

Title: Re: *நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!* காபியை போன்று...
Post by: சாக்ரடீஸ் on October 02, 2024, 04:15:09 PM

Alea mam 😇 super ...oru cup of tea la positivi(tea) aana oru message 🤩 sema mam


Title: Re: *நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!* காபியை போன்று...
Post by: MysteRy on October 02, 2024, 04:28:39 PM
Thank you Manja Sokka😊

(https://media.tenor.com/AUbdkW0Fgd4AAAAM/gp-muthu-gp-muthu-meme-template.gif)