FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 11, 2024, 08:04:16 PM
-
சில நேரம் நாம் தான்
காட்டுக்கு ராஜா என்று
தலைக்கனத்துடன் இருக்குமாம்
சிங்கம்
எதன் வலையிலும் சிக்காமல்
அதை
வீழ்த்திவிடுமாம்
சில நேரம்
மான்
இவ்வாறு
சிலர் உடைந்த ஆத்மாக்களாய்
சுற்றி கொண்டிருக்கிறோம்
நேசம் மறுக்கப்பட்டவர்களாய்
யாரையும் புண்படுத்த கூடாதென
தன் பலம் மறந்து
நேற்று
என்னுடன்
தனிமை இருந்தது
வேறு யாருமில்லை
இன்று
மட்டும் என்ன விதி விலக்கா ?
என்னை விட்டு விலகா
தனிமை என்றுமுண்டு
யாரோ ஒருவரின்
வாழ்க்கை இருளில்
சிறு மின்மினி பூச்சியின்
வெளிச்சமாய் இருப்பது
சிறு சந்தோஷம் தான்
இதுவரை எழுதிய
எழுத்துக்களெல்லாம்
ஒருவித பைத்தியம்
யாரிடம் யார் வெல்கிறோம்
என்பதில்லை உறவு !!!
யாரால் யார்
மகிழ்விக்கப் படுகிறோம்
என்பதில் ஒளிந்துள்ளது
உறவின் ஆழம்
யாரையேனும் புண்படுத்தி இருந்தால்
மன்னியுங்கள்
மகிழ்வாய் வாழ்வோம்
வணக்கம்
****JOKER****
-
nanba ena aachu