FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 10, 2024, 08:51:23 PM

Title: வரமா சாபமா ?
Post by: joker on September 10, 2024, 08:51:23 PM
ஆறுதல் தேடி
அழும் குழந்தைக்கு
கிடைத்திடும்
தாயின் குரல் போல
ஆறுதலாய்
உன் தோள்சாய
தேடும் என் மனம்

மற்றவர் பார்வைக்கு
சத்தமில்லா
நதியின் நீரோட்டமாய்
முகம் இருந்தும்
சலசலக்கும் காட்டாறாய்
புலம்பி திரியும் மனம்
விசித்திரமானது தான்

எழுது எழுது
என ஆர்ப்பரிக்கிறது
என் மனதில் உன் நினைவுகள்

உன்னை
பார்த்து கொண்டே இருக்கலாம்
என்ற நிலையிலிருந்து
என்றேனும் ஒரு முறை
பார்த்துவிட மாட்டேனா
என்ற நப்பாசையில்
நிற்கின்றேன் நான்

மணல் வீடு கட்டி விளையாடும்
குழந்தை போல தான்
பழகினாயோ ?
என்றேனும் ஓர் நாள்
உடைந்து இல்லாமல் போகும்
இவ்வுறவு என

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருப்பினும்
என் உள்ளம் தேடுவது
உன்னையே

மேகங்கள் மூடி கொண்டால்
சூரியன் கூட தன் பிரகாசத்தை
இழக்குமெனில்
நான் எம்மாத்திரம்

கரம் கோர்த்து
வாழவில்லை எனினும்
காலம் முழுவதும்
உன் நினைவில் வாழ்வது
வரமா சாபமா ?

****JOKER****
Title: Re: வரமா சாபமா ?
Post by: சாக்ரடீஸ் on September 11, 2024, 02:31:09 PM
Joker machi !
Memories la Antiques pieces machi, Evalo palasu aagutho avalo valuable thane machi ;D

அதீதமாக நேசித்தவரை நினைக்கும்
போது வடிக்கும்
கண்ணீருக்கு அடர்த்தி அதிகம்
நம் நினைவுகளில் என்றும்
நீங்காத பொக்கிஷம் அவர்களின் நினைவுகள்
எனவே
நினைவுகள் சாபமல்ல வரமே !


Machi nalaiku koyambedu varen  ;D ;D ;D alrdy neriya briyani waiting la iruku mothama ennaku vangi kuduthudunga machi ;)
Title: Re: வரமா சாபமா ?
Post by: joker on September 11, 2024, 03:32:59 PM
மச்சி Antiques pieces னு சொல்லி ஓரமா வெச்சிடுறாங்க மச்சி நம்மள
மறந்தும் போயிடுறாங்க

அது போகட்டும்
எப்பவும் போல கோயம்பேடு வந்திட்டு கால் பண்ணிடுங்க
பிரியாணி சாப்பிட போலாம்

yaa moideen  மட்டன் பிரியாணி சாப்பிட்டு அப்படியே Goat Movie  போயிட்டு உங்கள வண்டி ஏத்தி அனுப்பி விட்டுடுறேன் மச்சி

Am waiting machi
Title: Re: வரமா சாபமா ?
Post by: சாக்ரடீஸ் on September 11, 2024, 06:36:01 PM
Joker machi thoooooo redbus la bus ah book panniten
koyambed vanthutu athae pillar kita nittu call pandra vanthu pick up pannikonga  ;D
GOAT venda vera padam povom  ;D neenga ootuvinga ...


Title: Re: வரமா சாபமா ?
Post by: MysteRy on September 11, 2024, 06:46:17 PM
(https://media.tenor.com/WM52ikTQ_6gAAAAM/tamil-actress-gif-tamil-chat.gif)

Unga rendum perum pottu thala poren🙄

Private message nu option irkey adhu use panunga pa for personal talk pls😏

My humble request 🙏
Title: Re: வரமா சாபமா ?
Post by: சாக்ரடீஸ் on September 11, 2024, 06:49:27 PM
 alea mam sry  :P ini personal talk irukathu  ;D
Title: Re: வரமா சாபமா ?
Post by: MysteRy on September 11, 2024, 07:13:26 PM
(https://media.tenor.com/jEepybQfqLgAAAAM/kavin-kavinworld-gifs.gif)
Title: Re: வரமா சாபமா ?
Post by: joker on September 11, 2024, 07:32:31 PM
Machi ...Moonu peru pesitom appo idhu group message thane machi

appo ingaye pesalam thane ... oru doubt