FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 29, 2024, 08:48:48 PM
-
அவள் புன்னகை
எனக்கு
என் அந்நாளை
பிரகாசமாக்கும்
சூரிய ஒளி
அவள் சிரிப்பு
என் இதயத்தில்
மகிழ்ச்சியை நிரப்பும்
இசை
அவளுடன்
செலவழிக்கும்
ஒவ்வொரு நொடியும்
பகிர்ந்துகொள்ளும்
அன்பும் அந்நாளுக்கான
என் பரிசு
அவள்
எனக்கு தெரியாமல் போன
எனக்கு தேவையான
இதய துடிப்பு
அன்று நீ
கொடுத்த முத்தத்தை எல்லாம்
கண்ணாடி பாட்டிலில்
உப்பு போட்டு சேர்த்துவைக்கும்
மாங்காய் துண்டுகளை போல
மனது மிகவும் ரணமாய் இருக்கும் நேரத்தில்
இதமாய் நினைத்துக்கொள்ள
சேமித்து வைத்திருக்கிறேன்
இதயத்தின் ஓரத்தில்
அன்று
மொத்தமாய் சொல்ல
என்னை முழுமையாக்கினாய்
இன்றோ என்னை
பித்தனாக்கினாய்
நீ சொல்லிவிட்டு போன
ஒரு கோடி வார்த்தைகளை
சிறுக சிறுக
மலர்களை மாலையாய்
கோர்ப்பது போல
உன் நினைவில்
பைத்தியமாகும் நேரத்தில்
கவிதைகளாய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
உன்னுடன் சிரித்து
நடந்த வழித்தடங்களை
மறக்க முயற்சிக்கிறேன்
மீண்டும் ஒரு முறை
நடக்கையில்
புத்துணர்வாய் இருக்க
திரும்பி வராதவர்
என அறிந்தும்
கடந்த காலத்தை
சுமந்து கொண்டு நடக்கிறேன்
மரணத்திற்கு பின்
ஓர் உலகம் உள்ளதாம்
அதிலேனும்
உன்னுடன் நடக்க வேண்டும்
என்ற நப்பாசையுடன்
****JOKER****
-
பெண் சற்று பாக்கியசாலி
குழந்தையாய்
பிறக்கையில்
தந்தைக்கு
இன்னொரு தாய் கிடைத்த
சந்தோசம்
சகோதரனின்
தேவைகள் பல
சகோதரியின் பரிந்துரையின் பேரில்
கிடைக்க செய்திடுவாள்
அப்பாவிடமிருந்து
திருமணம் ஆகும்வரை
தந்தையின்
பொக்கிஷமாகவே
உலாவுவாள்
பிள்ளை பிறக்கும் வரை
கணவனுடன் அவள் விரும்பும்
சில இடங்களுக்கு
அழைத்து செல்லபடுவாள்
செல்லமாக
மகனின் ஆசையாய்
விமானத்தின் பயணமும்
அப்பாக்களை விட
அம்மாக்களுக்கே
அதிகம் கிடைக்கும்
மகளின் பிரசவம்
மருமகளின் பிரசவம்
மகனின் வெளியூர் வேலை
பேரப்பிள்ளைகளை
பார்த்துக்கொள்ளும் பொறுப்பு
என அம்மாக்களை அழைக்க
காரணங்கள் பல
அவள் பயணமும் பல
ஓடி ஆடி
அறுபது வயதிலும்
அதை செய்வாள்
ஆசையாய்
தன் பிள்ளைகளுக்காக
சில நேரம்
பசி மறப்பாள்
சில நேரம்
தூக்கம் துறப்பாள்
சில நேரம்
நோய் மறைப்பாள்
சொந்தமும் பந்தமும்
என்றும்
உயிர்ப்புடன்
இருக்க செய்யும்- அவள்
ஒரு
பாக்கியசாலி தானே ?
****JOKER****