FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 22, 2024, 08:40:00 PM

Title: உன் நினைவுகள்
Post by: joker on August 22, 2024, 08:40:00 PM
அட,!
துலாபார தட்டில்
ஓர் பக்கம்
உன் நினைவுகளை நிரப்புகிறேன்
மறுபக்கம் எதை கொண்டு
நிரப்புவது உனக்கு ஈடு என

அன்பு என்பது
அக்ஷய பாத்திரம் போல
என உணராமல்
கொள்முதல் நிலையம் போல்
உன்னிடம் கொட்டி
மிச்சம் ஏதுமில்லை என
உனக்காக காத்திருக்கிறேன்
திருப்பி தருவாய் என

உன்னை கண்ட நொடி
இவள் என இளகிய மனம்
பழக பழக
இறுகியது உன் நினைவுகளில்

நாளை என்பது
திகட்டாமல் இருக்க
உன் நினைவுகளே
போதுமானது
எனக்கு

முதன் முதலில்
சந்தித்தபோது
உன்னிடம் சொல்ல
சேகரித்த வார்த்தை எல்லாம்
ஆர்ப்பரித்து வரும் கடல் அலை
கரை கண்டதும் அமைதி கொள்வது போல
உனை கண்ட நொடி மறந்துவிடுகிறது

யோசித்ததுண்டு
பலமுறை
நீயும் என்னை போல்
என் நினைவுகளில்
கிறுக்கி கொண்டிருப்பாயோ என
யாரோ யாரறிவாரோ

போனதெல்லாம்
கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
பாரதிக்கே சந்தேகமெனில்
நாமெல்லாம் எம்மாத்திரம்

இழந்ததாகவே ஊர்
சொன்னாலும்
எக்காலத்திலும்
என்னுடையதாகவே
இருக்கும்
உன் நினைவுகள்



****JOKER***
Title: Re: உன் நினைவுகள்
Post by: Vethanisha on August 22, 2024, 10:42:13 PM
நாளை என்பது
திகட்டாமல் இருக்க
உன் நினைவுகளே
போதுமானது
எனக்கு


Wow arumayana varigal nanbare..😇😇