FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 12, 2024, 07:27:01 PM
-
இருளின்
விருந்தாளி அல்ல
உண்மை என்பது
ஜன்னலோர பயணத்தில்
ஓடி மறையும்
வண்ண காட்சிகள்
அல்ல
காதல் என்பது
சிறிது நேர
ஆசுவாசம் அல்ல
அன்பு என்பது
எல்லாகாலத்திலும்
நினைவில்கொள்ள
இதயத்தின் மூச்சு போல உள்ளது
என்பது
நம்பிக்கை
பார்த்து பார்த்து தீராத
கண்களைவிட்டு அகலாத
உன் முகம் அது ஓர்
போதை
வெயிலில் தாகம் தீர வழி தேடி
கண்ணில் தெரிந்த நீர் நோக்கி
ஓடி ஓடி செல்பவனுக்கு
சேர்ந்த இடம்
கானல் நீராகி போவது போல தான்
சிலருக்கு காதல் கைகூடுவது
என்பது
கரை எட்டியும்
தீராமல் மீண்டும் மீண்டும்
எழுச்சி கொள்ளும்
கடல் அலையின்
ஆசை போல
இந்த காமம் என்பது
சில சமயம்
பயமாக இருக்கிறது
திரும்பி வராத ஒருவருக்கு
காத்திருத்தல் என்பது
அது ஒரு சாபம்
பிறப்பின் சாபம்
****JOKER*****