FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 04:08:23 PM
-
சிந்தையில் தோன்றிடும் எண்ணங்களை
இச்சந்தையில் காட்டிட வந்த என்னை
மந்தையில் விழிக்கும் ஆட்டினை போல
வெட்டி கந்தலாக்கியே போனதும் யார்
என்றுதான் சிந்தனை செய்கையிலே
சிலர் என்னையும் காயங்கள் செய்திடுவார்
எத்துணை துன்பங்கள் தந்த போதும்
என் அன்பினை மட்டுமே நான் தருவேன்
ஏளனம் செய்திடும் ஓர் கூட்டம்
எள்ளி நகையாடும் ஓர் கூட்டம்
இத்தனை பேருக்கு மத்தியிலே
பேசிடவும் உண்டு ஓர் நாட்டம்
பத்தரை மாத்து தங்கமென
பலர் சொல்லி பின்னர்தான் நீங்கையிலே
ஏளனம் செய்பவர் கூட ஒரு
படி மேலென இக்கணம் எண்ணுகிறேன்