FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 04:06:36 PM
-
சொந்த வரியில்
சந்த நடையில்
சிந்தையில் தோன்றும்
எண்ணங்களை
என் செந்தமிழ் கொண்டே
நான் வடித்து
இச்சந்தியில்
பாடல் இயற்றிடவே
வந்து எழுதிய
எந்தன் வரிகளை
வந்து படித்தவள் பரராட்ட
எந்தன் எண்ணம்
ஒரு படி
மேலோங்கி
அந்த விந்தையில்
நானோ மகிழ்ந்திருந்தேன்
அந்தணன் சொல்லும்
மந்திரம் போல்
என் சிந்தனையில்
இன்று எப்பொழுதும்
அவள் சிந்திய வார்த்தை
எதிரொலிக்க
என் சொந்தம் அவளென
நானிருந்தேன்
பந்து சுவரினில்
பட்டது போல்
எந்தன் மனங்கவர்
அந்த பெண்ணும்
வந்த நாளிலே
தான் எனை நீங்க
நான் கந்தல்
துணி போல் ஆனேனே