FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:39:20 PM
-
மலர்ந்த முகத்தோடு
மனம் நிறைய குணத்தோடு
எனை நோக்கி வந்தவளே
என் அன்பை வென்றவளே
சொல்லில் வலு சேர்த்து
சுவை மிகுந்து எனக்கூட்டி
எந்தன் கவலையினை
எப்படியோ மறக்கடித்தாய்
அந்த பொழுதினில் நீ
எந்தன் தேவதைதான்
என்றே தோன்றிடவே
உன்னில் நட்பு கொண்டேன்
நாட்கள் சில சென்று
நாமுமே பேசுகையில்
நீயும் உன் சோகம்
என்னிடத்தில் பகிர்ந்தாயே
உந்தன் சோகத்தை
காண சகிக்காமல்
உள்ளம் தாங்காமல்
உபதேசம் செய்தேனே
எந்தன் பேச்சினைத்தான்
கேட்க பொறுமையின்றி
என்னை விட்டும் நீ
நீங்கி போனாயோ
போனால் எனக்கென்ன என
புறந்தள்ளி நானுமே
போகாதிருந்தே உன்
புளுக்கத்தை தீர்ப்பேனே
மூக்கு கண்ணாடி
அணிந்திருக்கும் மனிதருமே
சூடான தேனிரை
அருந்தையிலே கண் மறைக்கும்
நீராவி போலெந்தான்
கருத்துமே உனக்குமின்று
தோதாக இல்லையென்றே
தோன்றிடலாம் உன் மனதில்
ஆனாலும் என்ன செய்ய
உந்தன் கவலையினை
கண்டே களித்திருக்க
நானொன்றும் கல்லில்லை