FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:38:17 PM
-
அறுபுதத்தில் பிறந்தவளே
அதிசயங்கள் நிறைந்தவளே
என் சொல் தான் கேட்டு
இன்சொல் உதிர்த்தவளே
ஒரு நேரம் பேசுகையில்
உனக்காக பேச வந்தாய்
மறுநேரம் பேசுகையில்
எனக்காக பேச வந்தாய்
பேசியது இருமுறை தான்
என்றாலும் எனக்கதுவும்
வீசிடுமே காற்றெனவே
எந்தன் தலைமுறைக்கே
உன் பேச்சு நீ உதிர்க்க
என் காதில் கேட்கையிலே
தேன் வந்து பாய்ந்தார் போல்
தேகமோ சிலிர்த்ததடி
அப்படித்தான் நாமுமிங்கே
பேசிய வேளையிலே
உந்தன் மன நிலையும்
ஒரு நிலையில் இல்லையென
உன் பேச்சில் நான் உணர்ந்தே
காரணத்தை கேட்டேனே
ஏதும் சொல்லாது
நீயும் கடந்து சொல்ல
உந்தன் மனக்கவலை
என்னை தாக்கியதே
என்னால் யாதொன்றும்
செய்திட முடியாதே
என்றோ நீ எண்ணி
நீங்கி சென்றாயோ
ஏதும் செய்திடவே
இல்லை வழியெனினும்
எந்தன் நெஞ்சமதில்
உனக்காய் வேண்டிடுவேன்
உந்தன் சிக்கல்களோ
எத்துணை பெரிதெனினும்
எல்லாம் தீர்ந்துவிட
இறைவன் அருள்வானே