FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:34:08 PM
-
எரிதழல் போல என் இதயம்
உணர்ந்திட செய்த ஓர் பெண்ணே
தவரிப்போயும் தவரிழைக்கும்
தறுதலை இங்கே நானில்லை
உன் வழி தவறாய் இருந்ததென்றே
உன்னிடம் உரக்க சொல்லியதால்
என்னை இழிவாய் நடத்தியவள்
உன்னை அன்றி யாரிங்கே
உந்தன் தலையை ஆறுதலாய்
தடவி கொடுத்த என் கரத்தை
ஆபத்தென நீ கூறியதே
ஆபாசத்தின் உச்சமடி
என்னை தேடி வரும் மனிதர்
துயரை துடைக்கும் என் செயலில்
சத்தியமிட்டே நான் சொல்வேன்
என்றும் இல்லை இச்சையடி
அப்படி இருந்த என் மனதை
தப்பென உரைத்த உனையிங்கே
திட்டுதல் கூட பாவமென
நினைக்கும் என் மனம் பச்சையடி
உன்னை எழுதிய என் பேனா
உடைந்து நூறாய் போகட்டும்
இனியும் உன்னை எழுதினாலோ
என் கை தீயில் வேகட்டும்