FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 06, 2024, 08:23:33 PM

Title: ஓர் உறவு !
Post by: joker on July 06, 2024, 08:23:33 PM
செல்ல பிராணி ஒன்று வளர்த்தேன் -அதை
செல்லம் கொடுத்து வளர்த்தேன்

செல்லும் இடமெல்லாம் அழைத்தேன் -அதை
செல்ல பெயரிட்டு அழைத்தேன்

உண்ண உணவும் கொடுத்தேன் -வளர
உள்ளத்தில் அன்பும் கொடுத்தேன்

எனை தனிமையின் தோழன் என நினைத்தேன்
உன்னை கண்டபின் என் எண்ணத்தை மறந்தேன்

உன்னுடன் விளையாடிய நாட்கள் நினைத்தேன் -அவை
என்றும் எண்ணத்தில் நினைத்து  மகிழ்ந்தேன்

விடுமுறையில் உன்னை பிரிந்தேன்-
பாட்டி வீட்டில்  உன்னை நினைத்து
என்  கன்னத்தின் ஓரத்தில் அழுதேன்

மீண்டும் வீடு திரும்பியதும் உன்னை தேடினேன் -உன்னை
காணாமல் என் மனம் வாடினேன்

நீ தொலைந்ததாய் பெற்றோர் சொல்ல கேட்டேன்
சொன்னேன்
உனை காணாமல் இனி உணவு உன்ன மாட்டேன்

உனை தேடுவதாய் வாக்கு ஒன்று தந்தார்கள்
என்னுடன் வீதிக்கு தேடவும் வந்தார்கள்

என் மனம் போல் கதிரவனும் மறைந்தான்
வருண பகவானும் எனோ தேட உடன் வந்தான்

நினைத்தேன்  வருந்தினேன் குடை பிடித்து
விதியை நினைத்து வீதியின் ஓரத்தில் அமர்தேன்

தீடிர் என என் கையில் பழகிய முத்தம் , பழகிய ஸ்பரிசம்
உள்ளம் மகிழ்ந்தது உணர்வு புரிந்தது குடைக்குள் வந்தது

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !



(https://i.postimg.cc/9QXV12mL/IMG-20240706-WA0549.jpg)
pic courtesy - Meta Al

****JOKER****
Title: Re: ஓர் உறவு !
Post by: Ishaa on July 06, 2024, 11:03:08 PM
Azhagana Varigal Joker. Eppavum pole.

Ithai pol tholainthu pona uravugal marubadiyum kidaithal vazhkai santhoshamai marum, illaiya?

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !


Kavithaiyin happy end ku. Nandri.
Title: Re: ஓர் உறவு !
Post by: joker on July 08, 2024, 12:24:38 PM
நன்றி ishaa உங்கள் கருத்துக்கு


தொலைத்த உறவுகள்
சில நேரம் இப்படி தான்
தேடாமல் வந்து சேரும்
இதற்கு காத்திருப்பு
அவசியமாகிறது

சில நேரம்
வந்து சேரும் நேரம்
அனாவசியமாக கூடும்

எதுவாயினும்
சில நேரம்
இந்த மழை
நன்மையையும் செய்யும்
Title: Re: ஓர் உறவு !
Post by: joker on February 08, 2025, 03:04:07 PM
ஓர் மாலை  வேளையில்
வீட்டின் முற்றத்தில்
தனியாக யாரோ விட்டு
சென்றாரோ அவனை

பிறந்து
சில மாதம்  தான்
ஆயிருக்கும்
அம்மாவை கூப்பிட்டு
காண்பித்தேன்

வாரி எடுத்தாள்
ஆசையோடு பால் ஊற்றி
குடிக்க குடுத்தாள்
செல்ல பெயரும் வைத்தோம்

இன்னொரு பிள்ளை என
அம்மாவும் ,
விளையாட ஓர் துணை
என நானும் அன்பை
வாரி கொடுத்தோம்

பள்ளி முடிந்து
தெருமுனையில்
என்னை கண்டால் போதும்
ஓடி வருவான்

அம்மாவும் அவன் இல்லாமல்
வெளியில் செல்வதை
தவிர்த்தாள்

வளர வளர
ஊர்காரர்களுக்கு
அவன் மூர்க்கன்
எங்களுக்கோ
அவன் அன்பானவன்
எங்களை காப்பவன்

ஏனோ ஓர் நாள்
நோயுற்றான்
மருத்துவர்கள்
அவனுக்கு
நோய் இருப்பதாகவும்
சில நாட்களில்
இறந்து விடுவான் எனவும்
சொல்ல கேட்டு என்
தாய் மயக்கமுற்றாள்


பிரிந்தான்
ஓர் நாள்
எங்களை விட்டு
ஆனால்
ரேஷன் கார்டில்
அவன் பெயர் இல்லை
இருந்தும்
என்றும் எங்கள்
நினைவுகளில் அவன்

எங்கள் வீட்டுக்கு
வழி கேட்பவர்களுக்கு
ஓர் மக்கள் சொல்லும் அடையாளம்
அந்த வெள்ளை  நாய் இருந்த
வீடு தானே ?

அவர்கள் மனதிலும்
அழியாத நினைவுகளுடன்
அவன் வாழ்க்கை
அமைந்ததில் மகிழ்ச்சி


****JOKER****
Title: Re: ஓர் உறவு !
Post by: Vethanisha on February 10, 2025, 02:25:49 PM
En veethu chella pirani nyabagam vanthu viddathu.. avarum ipothu en koode illai aana avara pathi nenaichale epothume santosam than.. en peyaril paathi aval..Miss My cat Nisha😇
Title: Re: ஓர் உறவு !
Post by: joker on February 11, 2025, 01:36:48 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2Ftgyf980b%2Fcatgl.jpg&hash=719c8a94062acbc695f5cc141bac7dad1e58be45)
செல்ல செல்ல சீமாட்டி
வெள்ளை நிற சீமாட்டி

கொஞ்சி கொஞ்சி
அழைத்தால்
அருகில்
பம்மி பம்மி
வருவாள்

உடன்
ஓடி ஆடி
விளையாடிடுவாள்
ஆனந்தம்தனை
தந்திடுவாள்

பசி வந்தால்
அழுதிடுவாள்
பால் தந்தால்
மகிழ்ந்திடுவாள்

மீனை விரும்பி
உண்பாள்
வீட்டை சுற்றி
வந்திடுவாள்

நகரும் இடமெல்லாம்
காலை சுற்றி வருவாள்

உறங்கும் நேரம் கூட
என்னை பிரிய
மறுத்திடுவாள்

அன்பாய் ஓர்
பெயர் வைத்தேன்
என்றும் அவள்
நினைவை
அரவணைத்தேன்

என்றும் என் நினைவில் நிஷா cat
Ippadiku Vethanisha

Note: Vethanisha unga nisha cat ku samarpanam


Pic courtesy Metal AI


*****JOKER****